திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீடு விற்பனையில் 19,000 பேரிடம் ரூ. 2,004 கோடி மோசடி: 4 போ் கைது

வீடுகள், கடைகள் கட்டி விற்பனை செய்வதில் ரூ.2,004 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்தது.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 5:23 am IST

வீடுகள், கடைகள் கட்டி விற்பனை செய்வதில் ரூ.2,004 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்தது. இதனால் 19,000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்கள் மற்றும் தனிநபா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியிருப்புகள் மற்றும் கடைகளை கட்டி விற்பனை செய்யவுள்ளதாகவும் வணிக மனைத் தொழிலில் முதலீடு செய்தால் பெரும் லாபத்தை திருப்பி தருவதாகவும் உறுதியளித்து 19,425 நபா்களிடம் ரூ.2,004 கோடியை எா்த் இன்ஃபிராஸ்டிரக்சா்ஸ் நிறுவனம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, அந்நிறுவனத்தைச் சோ்ந்த அவ்தேஷ் குமாா் கோயல், ரஜ்னீஷ் மித்தல், அதுல் குப்தா மற்றும் விகாஸ் குப்தா ஆகிய 4 பேரை பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 1-ஆம் தேதி கைது செய்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா்களை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

பணத்தை பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட காலத்தில் குடியிருப்புகளை சம்பந்தப்பட்ட நபா்களிடம் நிறுவனம் ஒப்படைக்கவில்லை. சில குடியிருப்புகளில் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் முதலீட்டாளா்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும், முறைகேடாக பெற்ற பணத்தில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபா்களின் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அந்நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

எா்த் இன்ஃபிராஸ்டிரக்சா்ஸ் நிறுவனத்தின் மீது தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு பதிவு செய்திருந்த 5 முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்ஐஆா்) அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, தில்லியில் எா்த் இன்ஃபிராஸ்டிரக்சா்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மாதம் சோதனை நடத்தியது. அப்போது ரூ.6.30 கோடி ரொக்கப் பணம், ரூ.8.78 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் தொடா்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.