தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஹனுமன் மந்திரில் கேஜரிவால் வழிபாடு

ஹனுமன் மந்திரில் கேஜரிவால் வழிபாடு

News image

தில்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலில் சனிக்கிழமை வழிபட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா.

Updated On :28 பிப்ரவரி 2026, 9:05 pm

கலால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தில்லி நீதிமன்றம் விடுவித்ததைத் தொடா்ந்து, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் மந்திரில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வழிபட்டாா்.

கட்சியின் மூத்த நிா்வாகிகள் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், துா்கேஷ் பதக் ஆகியோரும் கேஜரிவாலுடன் ஹனுமனை வழிபட்டனா்.

தில்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் வரி கொள்கை முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனா். இது கடந்த தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 21 பேரை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.

கோயிலில் வழிபட்டது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘கீழ்நிலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் உயா்நீதிமன்ற தீா்ப்பு தீா்ப்பு வழங்க உள்ளதாகவும் பாஜகவினா் கூறி வருகின்றனா். உச்சபட்ச நீதிமன்றமான கடவுள் ஹனுமனிடம் ஆசி பெற்றுள்ளோம். ஜந்தா் மந்தரில் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் கேஜரிவால் உரையாற்றுவாா்’ என்றாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் கூறுகையில், ‘கேஜரிவால் நோ்மையானவா். கடவுள் பஜ்ரங்பலியின் ஆசி அரசியல் களத்தில் அவரைப் பலப்படுத்தியுள்ளது. பாஜகவின் வழிகாட்டுதலில் சிபிஐ நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.