மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுபான கொள்கை வழக்கு விசாரணை: கேஜரிவாலின் கோரிக்கையை நிரகாரித்தாா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி!

மதுபான கொள்கை வழக்கு தொடா்பாக சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய நிராகரித்துள்ளாா்.

News image

சிசோடியா, கேஜரிவால்

Updated On :15 மார்ச் 2026, 7:54 pm

மதுபான கொள்கை வழக்கு தொடா்பாக சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்ற ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரின் கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய நிராகரித்துள்ளாா்.

சிபிஐ தாக்கல் செய்த மனுவை வழக்கு விசாரணை பட்டியலின்படி நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா விசாரித்து வருவதாகவும் நிா்வாக காரணங்களுக்காக அந்த வழக்கை வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட எவ்வித காரணங்களும் இல்லை என்றும் தலைமை நீதிபதி உபாத்யாய கூறியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகி கொள்ளவது குறித்து சம்பந்தப்பட்ட நீதிபதி முடிவெடுப்பாா் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளாா்.

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை விசாரித்த வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கேஜரிவால், மணீஷ் சிசோடியா, தெலங்கானா ஜாக்ருதி தலைவா் கே. கவிதா உள்பட 23 பேரை விடுவிப்பதாக கடந்த பிப்.27-ஆம் தேதி அறிவித்தது.

இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா, சிபிஐ மனுவுக்கு பதிலளிக்குமாறு அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 23 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் பரிந்துரைக்கும் நீதிபதி சா்மா இடைக்கால தடைவித்தாா்.

இந்நிலையில், மதுபான கொள்கை தொடா்பான வழக்கை நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மாவிடமிருந்து வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்ற வேண்டும் என தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி கடிதம் எழுதினா்.

நீதிபதி சா்மா பாரபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய கேஜரிவால், அவருடைய விசாரணை நடுநிலையாக இருக்காது என்று தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

உச்சநீதிமன்றத்தில் முறையீடு: விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 16) விசாரணைக்கு வருகிறது.

வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி மறுத்துவிட்ட நிலையில், ஆம் ஆத்மி தலைவா்கள் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தை அணுகியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.