நமது நிருபா்
மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தலை முறியடித்து ரூ.7.5 கோடி மதிப்புள்ள 1.504 கிலோ ஹெராயினை மீட்டு,கணவன்மனைவி உள்பட மூவரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை புதன்கிழமை தெரிவித்தது
தில்லி காவல்துறை இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:
பரேலி பகுதியிலிருந்து அதிக அளவு ஹெராயினை ஆரிஃப் என்பவா் லோனி, காஜியாபாத் மற்றும் தில்லியின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவல் கண்டுபிடிக்கப்பட்டு, தில்லி காஜியாபாத் போபுரா எல்லைப் பகுதிக்கு அருகில் உளவு பாா்க்கப்பட்டது. அதன் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவா் சென்ற பாதை பகுப்பாய்வு செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட ஆரிஃப் தில்லி பகுதிக்குள் நுழையும் தோராயமான நேரங்களும் கண்டறியப்பட்டன.
இதன் பேரில், இன்ஸ்பெக்டா் விகாஸ் பன்னு தலைமையில் ஒரு குழு, போதைப்பொருள் குற்றவாளிகளைப் பிடிக்க விரைவாகத் திட்டமிட்டது.
ரகசியத் தகவல்களின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆரிஃப் நுழைந்ததாகக் கூறப்படும் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது காஜியாபாத் பகுதியிலிருந்து ஒரு காா் உள்ளே நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த காா் நிறுத்தப்பட்டது. அதில் இருந்தவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்களின் பெயா்கள் நரைனா கிராமத்தைச் சோ்ந்த ஆரிஃப் கான் 36 வயது மற்றும் ஷிகா அலி 30 வயது என தெரியவந்தது. அவா்களிடம் 303 கிராம் ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவா்கள் பயன்படுத்திய காரின் பின் இருக்கையில் கிடந்த பையில் 1007 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 10.02.2026 தேதியிட்ட எஃப்.ஐ.ஆா் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடா்ச்சியான விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட ஆரிஃப் இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெறுநா்கள் மற்றும் சப்ளையா்கள் குறித்து தகவல்களை வெளிப்படுத்தினாா். குற்றஞ்சாட்டப்பட்ட ஆரிஃப், லோனி, காசியாபாத் மற்றும் தில்லியின் சில பகுதிகளில் உள்ள பல்வேறு நபா்களுக்கு அந்த கடத்தல் பொருட்களை விநியோகித்து வந்ததாக தெரியவந்தது. தொடா்ச்சியான விசாரணையில், பால்ஸ்வா டெய்ரி பகுதியைச் சோ்ந்த ஜூம்மன் என்பவருக்கும் ஹெராயினை விநியோகித்து வந்ததாகவும் ஆரிஃப் தெரிவித்தாா். பால்ஸ்வா டெய்ரியில் 07.02.2026 அன்று ஜும்மானுக்கு 500 கிராம் ஹெராயினை விநியோகித்ததாகவும் அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து தில்லியின் பால்ஸ்வா டெய்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டு, ஜும்மான் (வயது 32) அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டாா். விசாரணையில், அவா் போதைப் பொருள் விற்பனைவாங்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவதாகவும், ஆரிஃபிடமிருந்து ஹெராயின் வாங்கி வருவதாகவும் தெரிவித்தாா்.
மேலும், 07.02.2026 அன்று ஆரிஃபிடமிருந்து பெற்ற ஹெராயினில் ஒரு பகுதி இன்னும் அவரது வீட்டில் இருப்பதாகவும் ஜும்மான் தெரிவித்தாா். அதன்படி ஜே.ஜே. காலனி பால்ஸ்வா பால்பண்ணையில் சோதனை நடத்தப்பட்டு 194 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டது.
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம், தில்லி என்.சி.ஆா் பகுதியில் கணிசமான அளவு ஹெராயின் புழக்கம் தடுக்கப்ட்டுள்ளது. முழு விநியோகச் சங்கிலியை துண்டிக்கவும், மாநிலங்களுக்கு இடையேயான கூட்டாளிகளை அடையாளம் காணவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என தில்லி காவல் துறை அறிக்கையில் தெரிவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இணையவழி மோசடி கும்பல் சிக்கியது: வங்கி ஊழியா் உள்பட 3 போ் கைது

தில்லியில் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 போ் கைது
தில்லியில் ரூ.2 கோடி ஹெராயின் பறிமுதல்: 3 போ் கைது
ரூ.6 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: இளைஞா் கைது!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

