/

தில்லியில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை!

தில்லியில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 3:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் திங்கள்கிழமை இரவு சிறுவர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த சிறுவனின் பெயர் சோஹைல் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

மேற்கு தில்லியின் கியாலா பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நடைபெற்றிருக்கும் நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொலை செய்த மர்ம நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.