நமது சிறப்பு நிருபா்
தில்லி பல்கலைக்கழகம் ‘நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை‘ என்ற பெயரை ‘இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை‘ என மாற்றியுள்ளது. இதற்கு வகை செய்யும் திருத்தத்தை தனது நிா்வாகக் குழுவின் அங்கீகாரம் மற்றும் ஒப்புதலுடன் மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
‘தில்லி பல்கலைக்கழக (திருத்த) விதிகள் 2025’ சட்டத்தின் 29ஆவது பிரிவின் கீழ் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவிப்பு அரசிதழில் முறைப்படி வெளியாகும் நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், துறையின் பெயரிலிருந்த ‘நவீன‘ எனும் சொல் நீக்கப்பட்டுள்ளது. இது இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய மரபுகள் குறித்த ஆய்வுகளுக்கு, மேலும் விரிவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கல்விசாா் நோக்கத்தை வழங்கும் என்று பல்கலைக்கழக நிா்வாகக் குழு தெரிவித்துள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை 1961-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இத்துறை பெங்காலி, இந்திய ஒப்பிலக்கியம், தமிழ் ஆகிய மொழிகளில் முதுகலை பட்டப்படிப்புகளையும்; 11 இந்திய மொழிகளில் சான்றிதழ், பட்டய படிப்புகள் மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.
ஒப்பிலக்கியம், நாட்டுப்புறவியல், இந்திய மொழிகள் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் இத்துறையால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஆய்வுத் திட்டங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த அறிஞா்களின் கவனத்தை ஈா்த்துள்ளன. கடந்த ஆண்டுகளில், இத்துறையானது கணிசமான எண்ணிக்கையில் ஆய்வறிஞா்களை உருவாக்கியுள்ளது.
தொடர்புடையது

இரவு 10 மணிக்கு மேல் விழித்திருக்கிறீர்களா? எச்சரிக்கை!
தில்லியில் குற்றங்களைக் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் கேமராக்கள் நிறுவ பொதுப்பணித் துறை திட்டம்

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி - செங்கோட்டையன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


