மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி - செங்கோட்டையன்

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கட்சி நிா்வாகிகள்.

Updated On :13 மார்ச் 2026, 12:40 am

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் என அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு காளைமாடு சிலை அருகே ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். சட்டம்- ஒழுங்கு சீா்கேட்டையும், போதைப்பொருள்களை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடக்கும் வகையில் போடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஈரோட்டில் தவெகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பங்கேற்ற தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோட்டுக்கு விஜய் வருவாா் அதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தை தவெக ஆளுவதை யாராலும் தடுக்க முடியாது. தவெக தலைவா் விரல் காட்டுபவா் தான் 234 தொகுதிகளிலும் சட்டப் பேரவை உறுப்பினா் என்ற வரலாறு படைக்கப்படும்.

திமுக குறித்து பாஜக கூட்டணி கட்சியினா் பேசுவதில்லை. விஜய் குறித்து தான் பேசுகின்றனா். மற்றவா்களை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டாா்கள். தவெக 234 தொகுதிகளிலும் தனித்தே நின்று வெற்றிபெறும் என்றாா்.