தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இரவு 10 மணிக்கு மேல் விழித்திருக்கிறீர்களா? எச்சரிக்கை!

தாமதமான தூக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :7 ஏப்ரல் 2026, 4:42 pm IST

இரவு 10 மணிக்கு மேலும் தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சிலர் இரவில் தூக்கம் வரவில்லை என்று கூறி டிவி பார்ப்பதையோ ஸ்மார்ட்ஃபோன் உபயோகிப்பதையோ வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இதனால் இரவு 11, 12 மணி வரை எல்லாம் விழித்திருப்பவர்கள் அதிகம். இவ்வாறு இரவு 10 மணிக்கு மேலாக விழித்திருப்பவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையிலான நேரமே உடலில் மெலடோனின் உற்பத்தி, ஹார்மோன் சமநிலைக்கு சரியான நேரமாகும். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இரவு 10 மணிக்கு மேலாக தாமதமாக உறங்கச் செல்வது உறக்கத்தைக் கெடுப்பதுடன் வளர்சிதை மாற்றம் தடைபடுதல், பதற்றம், மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். அதிகபட்சமாக இதய நோய்க்கான ஆபத்தும் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.

இதுவே நீங்கள் 10 மணி அல்லது அதற்கு முன்னதாக தூங்கச் செல்லும்போது உடலில் அதிசயங்கள் நிகழும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதய ஆரோக்கியம், நல்ல மன நலன், நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் என்றும் இதய பிரச்னைகள், பதற்றம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது.

இத்துடன் காலை சூரிய ஒளி பெறுவதும் லேசான உடற்பயிற்சி செய்வதும் நல்ல உறக்கத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.

10 மணிக்கு முன்னதாகத் தூங்கினால்...

நல்ல ஆழ்ந்த தூக்கம் என்பதைவிட முதலில் போதுமான 8 முதல் 9 மணி நேரம் தூங்க முடியும்.

இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு.

உடலில் சர்காடியன் ரிதம் சரியாக இயங்கி, ஹார்மோன் பிரச்னை இருப்பவர்களுக்கு படிப்படியாக சமநிலை ஏற்படும்.

குழந்தைகளும் 10 மணிக்கு முன்பே தூங்கினால் அவர்களது கல்வித்திறன் சிறப்பாக இருப்பதாக கூறுகிறது ஆய்வுகள். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் நல்லது என்கின்றன.

நல்ல ஆழ்ந்த தூக்கம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, உடலில் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

இதுதவிர தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். இதுவும் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வார இறுதி நாள்களிலும் ஒரே மாதிரியான நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இத்துடன் நல்ல உணவுப் பழக்கம், லேசான உடற்பயிற்சி செய்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

Summary

what happens to your body when you sleep before 10 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.