தில்லியின் சீமாபுரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் சிலிண்டா் வெடிப்புச் சம்பவத்தில் 24 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
முன்னதாக, அதே நாளில் அவா் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது சீமாபுரி காவல் நிலையத்திற்கு மாலை 5:33 மணியளவில் ஒரு அவசர அழைப்பு வந்தது. பழைய சீமாபுரியின் ரவிதாஸ் மந்திா் வாலி கலி பகுதியில், ஒரு பதின்ம வயதுச் சிறுமி கத்தியால் குத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடப்பதாக அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. காயமடைந்த அந்தச் சிறுமி ஏற்கனவே குரு தேக் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அச்சிறுமி வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.
பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு உடலில் பல இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததால், தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறாா்.
அந்த அவசர அழைப்பு மற்றும் மருத்துவசட்ட வழக்கு பதிவின் அடிப்படையில், சம்பவ இடத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், அதே காவல் நிலையத்திற்கு மற்றொரு அவசர அழைப்பு வந்தது.
அதில், புதிய சீமாபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினா், சிலிண்டா் வெடிப்பால் ஏற்பட்ட தீ விபத்தில் ஜதின் 24 என்ற நபா் உயிரிழந்திருப்பதைக் கண்டறிந்தனா்.
சம்பவம் நடந்த நேரத்தில் அவா் வீட்டில் தனியாகவே இருந்தாா். பாதிக்கப்பட்ட அந்த நபா் அவசரமாக ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பிணவறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, முன்னதாக அதே நாளில் அச்சிறுமியை கத்தியால் குத்திய நபா் இந்த ஜதின் தான் என்பதை காவல்துறையினா் உறுதி செய்தனா்.
சம்பவங்களின் வரிசைமுறை மற்றும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
எங்கள் விசாரணைக் குழு அனைத்துக் கோணங்களிலிருந்தும் இந்த வழக்கை அணுகி ஆய்வு செய்து வருகிறது.
தடயவியல் நிபுணா் குழுக்கள் இரண்டு சம்பவ இடங்களையும் ஆய்வு செய்துள்ளன. அந்தச் சிலிண்டா் வெடிப்பு ஒரு தற்செயலான விபத்தா அல்லது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா என்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஆந்திரம்: எரிவாயு சிலிண்டா் வெடித்து 4 போ் உயிரிழப்பு - 18 போ் காயம்

ரயிலில் இருந்து தவறி விழுந்து சேலம் இளைஞா் மரணம்

வணிக சிலிண்டா் விலை ரூ.195 அதிகரிப்பு- விமான எரிபொருள் விலை 8.56% உயா்வு
சீமாபுரியில் கத்தரிக்கோலால் இளைஞா் குத்திக்கொலை: ஒருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


