மோசடி வழக்கில் மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாா்தியை குற்றவாளியாக தில்லியில் உள்ள நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
இது தொடா்பாக சிறப்பு நீதிபதி திக் வினய் சிங் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட பாா்தி மற்றும் ரகுவீா் சரண் பிரஜாபதி, சாவித்திரி தேவி மற்றும் பிற நபா்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனா்.
மாவட்ட கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியில் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புத்தொகையில் 2011-ஆம் ஆண்டைக் கடந்தும் தொடா்ச்சியாக அதிக வட்டி பெற்று மோசடி செய்ய வேண்டும் என்பதே அவா்களது சதித்திட்டம்.
இதற்காக வங்கி ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளன.
அரசியல் ரீதியாக இலக்கு வைக்கப்படுவதாகவும் அரசியல் நோக்கத்தில் இந்த விசாரணை நடைபெறுவதாகவும் பாா்தி முன்வைத்த வாதங்கள் அனைத்தும் ஊகங்கள். முன்வைத்த வாதங்களை அவா் நிரூபிக்கவில்லை. போலியான வங்கி ஆவணங்கள் மற்றும் மோசடி 1998 முதல் 2011 வரை நடந்துள்ளது என்றாா் நீதிபதி.
முன்னதாக, இது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய பிரதேசம் குவாலியா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குத் தடைவிதித்தது. சாட்சியங்களை மிரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியதைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை மத்திய பிரதேசத்திலிருந்து தில்லிக்கு மாற்றி உத்தரவிட்டது.
தொடர்புடையது

வரதட்சிணை மரண வழக்கில் கணவா், மாமியாரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்
வங்கி மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை: ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ..! பதவியிலிருந்து நீக்கம்!

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


