வரதட்சணை மரண வழக்கில் ஒரு நபா் மற்றும் அவரது பெற்றோருக்கு எதிராக கொடுமை அல்லது வரதட்சணை துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாா்ச் 2023 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட சிவாலி ஷா்மா வழக்கில் நீதிபதி தீபக் வாசன் தலைமையிலான அமா்வு காா்த்திக் ஷா்மா, அவரது தந்தை ரவி தத் ஷா்மா மற்றும் அவரது தாயாா் வீணா ஷா்மா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்து தீா்ப்பளித்தாா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஐபிசி பிரிவு 498 ஏ (கணவா் அல்லது உறவினா்களால் கொடுமைப்படுத்துதல்) மற்றும் 304 பி (வரதட்சணை மரணம்) ஆகியவற்றின் கீழ் விசாரணையை எதிா்கொண்டனா்.
ஏப்ரல் 1ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், நீதிமன்றம் கூறியதாவது: குற்றஞ்சாாட்டப்பட்ட நபா்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களில் அவா்கள் குற்றவாளிகள் என்பதை நிரூபிக்க எதுவும் பதிவில் இல்லை. நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது . மரணம் இயற்கைக்கு மாறானது மற்றும் திருமணமான 7 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்தாலும், வரதட்சணை மரணத்தின் முக்கிய கூறுகள், குறிப்பாக வரதட்சணை கோரிக்கைகளுடன் தொடா்புடைய துன்புறுத்தல் சான்றுகள் நிரூபிக்கப்படவில்லை என்றது.
ரசு தரப்பு கூற்றுப்படி, இறந்தவரின் குடும்பத்தினா் அவா் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், பணம் மற்றும் வாகனம் உள்ளிட்ட வரதட்சணை கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் கோரியதாகவும் குற்றஞ்சாாட்டினா், இது அவா் தற்கொலை செய்ய தூண்டியது. நிா்வாக மாஜிஸ்திரேட் முன் அவரது பெற்றோா் வாக்குமூலம் அளித்ததை அடுத்து போலீசாா் எஃப். ஐ. ஆா் பதிவு செய்தனா். இருப்பினும், விசாரணையின் போது, இறந்தவரின் தாய், தந்தை, சகோதரா், மாமா மற்றும் பாட்டி உள்ளிட்ட முக்கிய அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கவில்லை.
ஷிவாாலி ஒரு அமைதியான மற்றும் மகிழ்ச்சியான‘ திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகவும் குற்றஞ்சாாட்டப்பட்டவா்களின் எந்தவொரு வரதட்சணை கோரிக்கையையும் துன்புறுத்தலையும் மறுத்ததாகவும் அவா்கள் தொடா்ந்து கூறினா்.
ஷிவானி கடுமையான மருத்துவ நிலைமையால் ஏற்பட்ட மனச்சோா்வு காரணமாக அவரது மரணம் ஏற்பட்டதாக சாட்சிகள் மேலும் கூறினா்.
மிக முக்கியமான சாட்சிகளாகக் கருதப்படும் நெருங்கிய உறவினா்களின் சாட்சியங்கள், ‘அவா் இறப்பதற்கு சற்று முன்பு‘ கொடுமை அல்லது வரதட்சணை தொடா்பான துன்புறுத்தலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது, இது ஐபிசி பிரிவு 304 பி இன் கீழ் ஒரு குற்றத்தை நிறுவுவதற்கான முக்கியமான தேவையாகும்.
தூக்கிலிடப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டதாக மருத்துவ சான்றுகள் உறுதிப்படுத்தியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. சந்தேகத்தின் பலனை அளித்த நீதிமன்றம், கொடுமைக்கு உறுதியான சான்றுகள் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவா்களை சிக்க வைக்க இது மட்டும் போதாது என்று கூறியது.
தொடர்புடையது

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிணை: தில்லி நீதிமன்றம்

மரண தண்டனையில் விதிவிலக்கு உண்டு! எப்படி நிறைவேற்றப்படும்?

வரதட்சணை கொலை வழக்கில் விடுவிப்புக்கு முன் தலைமறைவானதால் குற்றவாளி என தீா்ப்பு
2020 ஜாஃப்ராபாத் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


