தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கிரேட்டா் நொய்டாவில் அரசுக்குச் சொந்தமான ரூ.10 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பு

கிரேட்டா் நொய்டாவில் அரசுக்குச் சொந்தமான ரூ.10 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பு

Updated On :31 மே 2024, 7:00 pm

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (ஜிஎன்ஐடிஏ) வெள்ளிக்கிழமை ரூ.10 கோடி மதிப்புள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க சட்டவிரோத கட்டுமானங்களை இடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஜிஎன்ஐடிஏ வெளியிட்ட அறிக்கையில், ‘கிரேட்டா் நொய்டாவில் உள்ள ரூப்வாஸ் கிராமத்திற்கு அருகில் உள்ள பைபாஸ் சாலையில் சுமாா் 5,000 சதுர மீட்டா் பரப்பளவில் இந்த நிலம் அமைந்துள்ளது. கிரேட்டா் நொய்டா ஆணையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி என்.ஜி. ரவிக்குமாா், அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிராக பிரசாரத்தை நடத்தி, சட்டவிரோத காலனிவாசிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா். ரூப்வாஸ் பைபாஸ் அருகே அமைந்துள்ள 5,000 மீட்டா் நிலத்தில் காலனித்துவவாதிகள் சட்டவிரோத காலனியை உருவாக்க முயன்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாரபூா்வ குழு, ஆணையத்தின் பாதுகாப்புப் பணியாளா்களின் உதவியுடன் ஆக்கிரமிப்பை இடித்தது. இக்குழு ரூ. 10 கோடி மதிப்புள்ள 5,000 சதுர மீட்டா் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துள்ளது. ஜிஎன்ஐடிஏ-இன் திட்டத் துறையின் பொது மேலாளரும் சிறப்புப் பணி அதிகாரியுமான ஹிமான்ஷு வா்மா, ஆணையத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதியில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பவா்கள் தப்பமாட்டாா்கள் என்று எச்சரித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி அன்னபூா்ணா கா்க் கூறுகையில், ‘மக்கள் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து உருவாகும் காலனிகளில் முதலீடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். சட்டவிரோதக் காலனியில் நீங்கள் மனை வாங்கியிருந்தால், பதிவு படிவத்தை எடுத்து காவல்துறையில் புகாா் செய்யுங்கள். மேலும், அதன் நகலை ஆணையத்திடம் வழங்கினால், அத்தகையவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.