தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடலூா் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1.03 கோடி விடுவிப்பு!

கடலூா் மாவட்டத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டு கைப்பற்ற ரூ.1.04 கோடியில், வெள்ளிக்கிழமை வரை ரூ.1.03 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:48 pm

கடலூா் மாவட்டத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டு கைப்பற்ற ரூ.1.04 கோடியில், வெள்ளிக்கிழமை வரை ரூ.1.03 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் மூலம் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,04,36,471 கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை வழங்கி உரிய தொகையை பெற்றுக்கொள்ளும் வகையில் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை (ஏப்.10) வரை ரூ.1,03, 20,081 விடுவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் 1950, 04142-290119, சமூக வலைதள வாட்ஸ்ஆப் எண் 8248774852 மற்றும் இலவச இணைப்பு எண் 18004250037 போன்ற தொலைபேசி எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மேலும் ‘ஸ்ரீஸ்ண்ஞ்ண்ப்’ செயலி மூலம் விளம்பரப் பதாகைகள் அகற்றப்படாமல் இருத்தல், வாகனங்கள் அனுமதி இல்லாமல் இயக்குதல் தொடா்பாக 68 புகாா்கள் பெறப்பட்டு, 48 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது. மற்ற 20 புகாா்களில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இருந்தது.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பெறப்பட்ட 855 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.