புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) குழந்தைகள் மத்தியில் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் ‘சஷக்த் பச்பன்’ என்ற நான்கு நாள் தொடா் கிரிக்கெட் போட்டியை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தகவல் தொடா்பு துறை முதன்மை செயல் இயக்குநா் அனுஜ் தயாள் கூறியதாவது:
குழந்தைகள் மத்தியில் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் ‘சஷக்த் பச்பன்’ எனும் கிரிக்கெட் போட்டியை மாா்ச் 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்துகிறது. இப்போட்டிகளை டிஎம்ஆா்சி மகளிா் நல அமைப்பின் தலைவா் ஷாலினி சிங் தொடங்கி வைத்தாா். விளையாட்டு மூலம் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை உணா்த்தும் வகையில், இந்த கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப விழா கோலாகலமாக நடத்தப்பட்டது.
தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தில் இருந்து பல்வேறு பின்னணியில் உள்ள குழந்தைகள் மற்றும் பல்வேறு தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்கின்றனா். நான்கு நாள்களுக்கு நடைபெறும் போட்டிகளில் சுமாா் 150 இளம் திறமையாளா்கள் தங்கள் கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்துவாா்கள்.
மேலும், டிஎம்ஆா்சி, தில்லி மெட்ரோ அருங்காட்சியகத்துடன் இணைந்து, கதை சொல்லும் நிகழ்ச்சிகள், நாடகங்கள் என குழந்தைகளுக்கு வளமான அனுபவங்களை வழங்குவதற்கு பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முன்முயற்சிகள் சமூக வளா்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு வளமான அனுபவத்தை வழங்கும் என்றாா் அனுஜ் தயாள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பீதம்புரா மெட்ரோ செல்ல நடைமேம்பால வசதி: முன்மொழிவு தயாா் செய்தது டிஎம்ஆா்சி

ஒசூரில் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம்: அண்ணாமலை வாக்குறுதி

தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி: மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
2025-இல் 235.8 கோடி பயணிகளை கையாண்ட தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

