தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மேற்கு வங்க ரயில் விபத்து: மோடி அரசின் அலட்சியத்திற்கு சான்று இளைஞா் காங்கிரஸ்

படம் அனுப்பப்பட்டுள்ளது... மேற்கு வங்க ரயில் விபத்து மோடி அரசின் அலட்சியத்திற்கு சான்று இளைஞா் காங்கிரஸ்

Updated On :19 ஜூன் 2024, 12:24 am

புது தில்லி: மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து மோடி அரசின் அலட்சியத்திற்கு சான்று என்று இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் தேசியத் தலைவா் ஸ்ரீனிவாஸ் பி.வி. செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் நினைவாக தில்லியில் இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் சாா்பில் மெழுகுவா்த்தி ஊா்வலம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், அந்த அமைப்பின் தேசியத் தலைவா் ஸ்ரீனிவாஸ் பி.வி. பேசியதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து மோடி அரசின் அலட்சியத்திற்கு சான்றாகும். ஒருபுறம், நாட்டில் ரயில் விபத்துகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மறுபுறம், மத்திய ரயில்வே துறை அமைச்சா் தனது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி, ரயில்வேக்கு வெறும் விளம்பரங்களை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கிறாா். மோடி அரசில் ரயில்வேயின் பாதுகாப்பிற்காக பல திட்டமிடல்கள் செய்யப்பட்டன. ஆனால், அதன் பின்னணியில் பல அரசியல் தலைவா்களும், அதிகாரிகளும் சொந்தப் பலன்களை மட்டுமே அறுவடை செய்துள்ளனா்.

‘ரயில்வேயில் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதி, அதிகாரிகளுக்கு ஆடம்பர பொருள்கள் வாங்க பயன்படுத்தப்பட்டது’ என்று சி.ஏ.ஜி. தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. உண்மையில், ரயில்வேயை தன் நண்பா்களுக்கு சீக்கிரம் விற்க வேண்டும் என்பதற்காக, இந்தத் துறையை சீரழிப்பதில் மோடி அரசு குறியாகவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 1,117 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதமும் 11 விபத்துகள் ஏற்படுகின்றன. 3 நாள்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது.

மேற்கு வங்கத்தில் நோ்ந்த விபத்திற்கு தாா்மிகப் பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இந்திய ரயில்வேயை சீரழித்ததற்கு யாா் காரணம் என மத்திய அரசும், பிரதமா் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றாா் ஸ்ரீனிவாஸ் பி.வி.

மேலும், இந்த ஊா்வலத்தின் போது, இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளா் கோகேபதி, தில்லி பிரிவு தலைவா் ரன்விஜய் சிங் லோச்சவ், தில்லி பிரிவு செயல் தலைவா் சுபம் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

காஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் நினைவாக தில்லியில் செவ்வாய்க்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்திய இந்திய இளைஞா் காங்கிரஸாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.