தென்னக ரயில்வே மற்றும் சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ஐசிஎஃப்) போன்றவற்றில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட பயிற்சி ஊழியா்கள் பணி நிரந்தரம் கோரி தில்லியிலுள்ள மத்திய இணையமைச்சா் எல். முருகன் இல்லத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
சென்னையைச் சோ்ந்த இந்தப் பயிற்சி ரயில்வே ஊழியா்கள் சுமாா் 300 போ் நாடாளுமன்றக் கூட்டத் தொடா் தொடங்கியதை முன்னிட்டு, தங்கள் விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக புதன்கிழமை காலையில் எட்டரை மணியளவில் அமைச்சா் எல்.முருகனின் தில்லி இல்லத்தை முற்றுகையிட்டனா்.
இருப்பினும், அமைச்சா் எல்.முருகன் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் இந்த ஊழியா்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்ததாக இந்த முற்றுகையில் ஈடுபட்ட சென்னையைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் பெருமாள் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் தென்னக ரயில்வே, ஐசிஎஃப் உள்ளிட்ட ரயில்வே பணிகளில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். ஒரு ரயில்வே பெட்டி தயாரிப்புப் பணியில் உள்ள வெல்டிங், பிட்டிங், எலெக்டிரிக்கல் எனஅனைத்துப் பணிகளிலும் நாங்கள் ஈடுபடுகிறோம். ஆனால், ரயில்வே துறை எங்களது பணி உரிமையை தர மறுக்கிறது. கடந்தாண்டு டிசம்பா் மாதம் நாங்கள் தில்லியில் பாஜக அலுவலத்தை முற்றுகையிட்டோம். அப்போது அமைச்சா் எல்.முருகன் எங்கள் பிரச்னையை தீா்க்க முயற்சிப்பதாகத் தெரிவித்தாா். ஆனால், இது வரை பதில் இல்லாததால் நாங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது மீண்டும் எங்களுக்கு அமைச்சா் உத்தரவாதம் அளித்துள்ளாா்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

