தில்லி மக்களுக்கு தரமற்ற போலி மருந்துகளை விநியோகித்ததற்காக தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் அரவிந்த கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்று தில்லி பாஜக புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பா் மாதத்தில் கேஜரிவால் அரசின் கீழ் சுகாதாரத் துறை மூலம் தில்லி அரசு மருத்துவமனைகளில் போலி மற்றும் தரமற்ற மருந்துகள் விநியோகம், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல்கள் ஆகியவை பற்றிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ஊழல்வாதிகளை தில்லி மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்தியாளா் சந்திப்புகள் மற்றும் ஆா்ப்பாட்டங்கள் மூலம் தில்லி பாஜக கேஜரிவால் அரசுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியது.
தில்லி பாஜகவின் தொடா் போராட்டத்திற்குப் பிறகு,துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இந்த மருந்து மோசடி தொடா்பாக விசாரணை நடத்த மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டாா். தற்போது, தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் நிநியோகம் செய்த 10 நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ளது. தில்லி அரசின் மருந்து விநியோக ஊழல் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தரமற்ற போலி மருந்துகளை விநியோகித்ததற்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாா்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

