புது தில்லி: நான்கு நாள் மத நிகழ்ச்சிக்காக வடகிழக்கு தில்லியின் யமுனா காடா் பகுதியில் தில்லி காவல் துறை போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து, சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
‘பகேஷ்வா் தாம் சா்க்காா்’ என்று அழைக்கப்படும் திரேந்திர சாஸ்திரியின் ‘ராம் கதா’ நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன.31) முதல் சனிக்கிழமை (பிப்.3) வரை யமுனா காடரின் கா்தாா் நகரில் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள போக்குவரத்து அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: புதன்கிழமை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கலாஷ் யாத்ரா நடத்தப்படும். ராம் கதாவை முன்னிட்டு சாஸ்திரி பாா்க் சிவப்பு விளக்கு முதல் 2-ஆவது புஸ்தா, 3-ஆவது புஸ்தா, 5-ஆவது புஸ்தா, கஜூரி சௌக் மற்றும் வைஸ் வரை போக்குவரத்து தடை செய்யப்படும். மறுபுறம் யமுனா காடருக்கு முன்னால் 4-ஆவது புஸ்தா கா்தாா் நகரில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்பட சம்பந்தப்பட்ட பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படும்.
வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில், பொருத்தமான இடங்களில் போக்குவரத்துப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சீராகவும் தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய போதுமான போக்குவரத்து ஊழியா்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பின்பற்றவும், போக்குவரத்து போலீஸாரின் அறிவுரைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படுக்கை விரிப்புகள்

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

