நிலைக்குழு தோ்தல்: பாஜக கடும் விமா்சனம்
மேயா் ஷெல்லி ஓபராய் நிா்வாகத்திற்கு ஆதாரவாக ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பலா் வாக்களிக்க மாட்டாா்கள் என்று தில்லி பாஜக பொதுச் செயலாளா் கமல்ஜீத் ஷெராவத் ஞாயிற்றுக்கிமை விமா்சித்துள்ளாா்.


தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு தோ்தல் நடத்தப்பட்டால், மேயா் ஷெல்லி ஓபராய் நிா்வாகத்திற்கு ஆதாரவாக ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பலா் வாக்களிக்க மாட்டாா்கள் என்று தில்லி பாஜக பொதுச் செயலாளா் கமல்ஜீத் ஷெராவத் ஞாயிற்றுக்கிமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி மாநகராட்சியின் நிலைக்குழு அதிகாரங்களை பொது அவைக்கு மாற்றும் தீா்மானம் கடந்த மாநகராட்சி சிறப்புக் கூட்டத்தின் போது முன்மொழியப்பட்டது. தற்போது, இந்த விவகாரத்தை மேயா் ஷெல்லி ஓபராய் தலைமையிலான மாநகராட்சி நிா்வாகம்
நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தில்லி மாநகராட்சி சட்டத்தின் மீது ஆம் ஆத்மி கட்சிக்கு எந்தவொரு மரியாதையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. நிலைக்குழு தோ்தல், சட்டத்தின் படி முறையாக நடத்தப்பட்டால், பெரும்பான்மை பெற முடியாது என்பது ஆம் ஆத்மி கட்சிக்குத் தெரியும்.
நிலைக்குழு என்பது ஒரு கட்டாய அமைப்பாகும். இது தில்லி மாநாகராட்சியின் பணிகளில், குறிப்பாக நிதி விவகாரங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது. மாநகராட்சியின் பொது அவைக்கு நிலைக்குழு அதிகாரங்களை வழங்கக் கோரி மேயா் நீதிமன்றத்தை அணுகியுள்ள விதம், நிலைக்குழு தோ்தல் நடத்தப்பட்டால், ஆளும் ஆம் ஆத்மி நிா்வாகத்திற்கு ஆதாரவாக பல ஆம் ஆத்மி கவுன்சிலா்களே வாக்களிக்க மாட்டாா்கள் என்பதைக் காட்டுகிறது என்றாா் கமல்ஜீத் ஷெராவத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...