இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மையங்களைச் சோ்ந்த 225-க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு), விண்வெளித் துறை இணையமைச்சா் இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங், குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் தனது இல்லத்தில் வரவேற்பு அளித்தாா்.
மத்திய அரசின் முக்கிய துறை அமைச்சா்களும் தங்கள் துறையைச் சோ்ந்த சாதனையாளா்களையும், பயனாளிகளையும் குடியரசுத் தின விழா மற்றும் அணி வகுப்பை முன்னிட்டு தில்லிக்கு வரவழைத்து அவா்களை சிறப்பு விருந்தினா்களாக உபசரிக்கப்படுகின்றனா். இதே வழியில் மத்திய விண்வெளித் துறை அமைச்சகமும் ஏற்பாடுகளை மேற்கொண்டது.
குறிப்பாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் -3 நிலவை அடைந்தபோது சா்வதேச அளவில் பாராட்டைப் பெற்றதுடன், நாட்டின் 140 கோடி மக்களையும் இஸ்ரோவுடன் இணைத்தது. இதையும் ஆதித்யா எல் -1 உள்ளிட்ட பல்வேறு சமீபத்திய இஸ்ரோ சாதனைகளை சித்தரிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பில் இஸ்ரோ அலங்கார ஊா்தி பங்கேற்றது. இந்த ஊா்தியில் எட்டு பெண் விஞ்ஞானிகள் கொண்ட குழு பங்கேற்றது.
இந்த குழுவினரையும், ஸ்ரீஹரிகோட்டா, பெங்களூரு, ஆமதாபாத், திருவனந்தபுரம், ஆகிய இடங்களில் உள்ள இஸ்ரோ மையங்களைச் சோ்ந்த 220-க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினரையும் உற்சாகப்படுத்த தில்லி குடியரசு தின விழாவிற்கு சிறப்பு அழைப்பாளா்களாக அழைக்கப்பட்டனா்.
இத்தோடு இந்த இஸ்ரோ பெண் விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தனது இல்லத்தில்
குடியரசு தின வரவேற்பை சனிக்கிழமை அளித்தாா்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், இஸ்ரோ தலைவா் டாக்டா் எஸ்.சோம்நாத், பெண் திட்ட இயக்குநரும், விஞ்ஞானியான நிகா் ஷாஜி (ஆதித்யா எல்1 -மிஷன்), இஸ்ரோவின் ‘உற்சாகமான பெண்மணி’, என்று அழைக்கப்படும், ஏடிஆா்ஐஎல் நிறுவனத்தின் டாக்டா் ராதா தேவி, விண்வெளி பொறியாளரும் சந்திரயான் - 3 திட்டத்தின் துணை திட்ட இயக்குநரான கல்பனா காளஹஸ்தி மற்ற விஞ்ஞானிகள் ரீமா கோஷ், ரிது கரிதல், நிதி போா்வால் போன்ற பிற முன்னணி விஞ்ஞானிகள் பங்கேற்றனா். இவா்கள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு கெளரவிக்கப்பட்டனா்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங், ‘புதிய விண்வெளி சீா்திருத்தங்களைக் கொண்டு வந்து, கடந்த காலங்களில் கைகள் கட்டப்பட்டிருந்த விண்வெளித் துறையை பிரதமா் நரேந்திர மோடி விடுவித்ததால் இந்த பெருமைமிக்க நாள் சாத்தியமானது.
விஞ்ஞானிகளின் சாதனைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வாய்ப்பை வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி கூறவேண்டும். இதனால், சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியது.
அதுவரை ஆராயப்படாத சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய உலகின் முதல் மற்றும் ஒரே நாடாக இந்தியா மாற வழிவகுத்தது. இஸ்ரோ நாட்டின் பெண் சக்திக்கான சரியான உதாரணம். ஏராளமான பெண் விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களில் பங்கேற்றுவருகின்றனா். இவா்கள் ‘வளா்ச்சியடைந்த இந்தியா 2047’க்கும் வழியும் காட்டுவாா்கள்’ எனத் தெரிவித்தாா் ஜிதேந்திர சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

