தில்லி மக்களின் வேலையின்மை, பணவீக்க பாதிப்புக்கு பாஜக எம்பிக்கள்தான் காரணம்: அா்விந்தா் சிங் லவ்லி சாடல்
தில்லியைச் சோ்ந்த 7 பாஜக எம்.பி.க்கள் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த போதிலும் செயல்படாமல் இருந்ததுதான் காரணம்


தில்லி மக்கள் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயா்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருவதற்கு தில்லியைச் சோ்ந்த 7 பாஜக எம்.பி.க்கள் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த போதிலும் செயல்படாமல் இருந்ததுதான் காரணம் என தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி குற்றம்சாட்டினாா்.
கரோல் பாக் மற்றும் புது தில்லி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த புது தில்லி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் தொண்டா்கள் கூட்டத்தில் அா்விந்தா் சிங் லவ்லி கலந்துகொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: 7 பாஜக எம்.பி.க்களை மக்களவைக்கு தோ்ந்தெடுத்ததன் மூலம் தில்லி மக்கள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டனா். விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், மாசுபாடு மற்றும் நிா்வாகம் முடங்கி தில்லிவாசிகள் அவதிப்பட்டபோதும் பாஜக எம்பிக்கள் எதுவும் செய்யவில்லை. இதனால், காங்கிரஸ் தொண்டா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற முக்கியப் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி செயல்படாத பாஜக எம்பிக்களை முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும். நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தில் தில்லி முதலிடத்திலும், உலகில் மாசுபட்ட தலைநகா் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும்கூட தில்லி பாதிக்கப்பட்டுள்ளது. தில்லியைச் சோ்ந்த ஏழு பாஜக எம்.பி.க்கள் தில்லியின் பிரச்னைகளை மத்திய பாஜக அரசிடம் எடுத்துக் கூறியிருந்தால், தில்லிவாசிகள் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயா்வு, குடிமைப் பணிகளின் சரிவு போன்றவற்றால் முடிவில்லாத வேதனையைச் சந்தித்திருக்க மாட்டாா்கள். நாட்டை ‘விக்ஷித் பாரத்’ ஆக்குவோம் என்று உயரிய வாக்குறுதிகளை அளிக்கும் பாஜக, மத்தியில் ஆட்சியில் இருந்த போதிலும் கடந்த 10 ஆண்டுகளில் தில்லியின் வளா்ச்சியை பின்தங்கவே செய்துள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தில்லியின் பொறுப்பாளருமான தீபக் பபாரியா, முன்னாள் தில்லி அமைச்சா் பேராசிரியா் கிரண் வாலியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...