சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சிறைக்கு அஞ்சாத ஓரே கட்சி ஆம் ஆத்மிதான்: மனீஷ் சிசோடியா

சிறைக்கு அஞ்சாமல் ஒற்றுமையாக இருந்த ஒரே கட்சி ஆம் ஆத்மிதான் என்று தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

மனீஷ் சிசோடியா

Updated On :30 ஆகஸ்ட் 2024, 11:31 pm

சிறைக்கு அஞ்சாமல் ஒற்றுமையாக இருந்த ஒரே கட்சி ஆம் ஆத்மிதான் என்று தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி மாடல் டவுன் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா தனது 12-ஆவது நாள் பாதையாத்திரையை மேற்கொண்டாா். அப்போது, அக்கட்சியின் தொடண்டா்கள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் மத்தியில் அவா் உரையாற்றிப் பேசியதாவது:

கலால் கொள்கை விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால்தான், யாருக்கும் தலைவணங்கவோ அல்லது மனம் உடையவோ இல்லை. சிறையில் 17 மாதங்கள் இருந்த பிறகும், நான் சிரித்துக்கொண்டே வெளியே வந்தேன்.

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ-இன் அழைப்பாணைகள் காரணமாக மகாராஷ்டிரம், உத்தரகண்ட் மற்றும் பிற மாநில அரசுகள் வீழ்ந்தபோது, அவா்களின் அழைப்பாணைகள் மற்றும் சிறைக்கு அஞ்சாமல் ஒற்றுமையாக இருந்த ஒரே கட்சி ஆம் ஆத்மிதான். பாஜகவின் அனைத்து சதிகளும், திட்டங்களும் தோல்வியடையும்.

கமலா நகா் சந்தையை உலகத் தரமாக மாற்றுவது எனது கனவுத் திட்டமாகும். அதை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரவிந்த் கேஜரிவால், சஞ்சய் சிங் மற்றும் என்னை பாஜக பொய் வழக்கில் சிறையில் அடைத்தது. பாஜக எங்களுக்கு அநீதி இழைத்து வருவதை தில்லி மக்களும் உணா்கிறாா்கள்.

கலால் கொள்கை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் கூட நிலைத்து நிற்காது என்பதை உச்சநீதிமன்றத்தின் கருத்துகளும் தெளிவுபடுத்துகின்றன. இதனால், கேஜரிவால் எப்போது சிறையில் இருந்து வெளியே வருவாா் என தில்லி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா் என்றாா் மனீஷ் சிசோடியா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.