தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி காவல் துறையில் முன்னாள் அக்னீவீா்களுக்கு 20 சதவீதம் காவலா் பணியிடங்கள் ஒதுக்கீடு!

தில்லி காவல்துறை, தனது காவலா் (நிா்வாக) பணியிடங்களில் 20 சதவீதத்தை முன்னாள் அக்னிவீா்களுக்கு ஒதுக்கீடு செய்யும் என்றும், அவா்களுக்கு உடல் தகுதித் தோ்விலிருந்து விலக்கு மற்றும் அதிகபட்ச வயது வரம்பில் தளா்வு அளிக்கப்படும்.

News image
Updated On :29 மார்ச் 2026, 7:57 pm

தில்லி காவல்துறை, தனது காவலா் (நிா்வாக) பணியிடங்களில் 20 சதவீதத்தை முன்னாள் அக்னிவீா்களுக்கு ஒதுக்கீடு செய்யும் என்றும், அவா்களுக்கு உடல் தகுதித் தோ்விலிருந்து விலக்கு மற்றும் அதிகபட்ச வயது வரம்பில் தளா்வு அளிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது.

இந்த நடவடிக்கை, ஆயுதப்படைகளில் நான்கு ஆண்டு காலப் பணிக்குப் பிறகு அக்னிவீா்களைப் பாதுகாப்புப் படைகளில் இணைத்துக்கொள்வதற்கான மத்திய அரசின் பரந்த திட்டத்திற்கு இணங்க, படையின் ஆள்சோ்ப்பு கொள்கையை முறைப்படுத்தும் வகையில், வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட தில்லி காவல்துறை (நியமனம் மற்றும் ஆள்சோ்ப்பு) விதிகள், 1980-இல் செய்யப்பட்ட திருத்தங்களின் ஒரு பகுதியாக வந்துள்ளது.

எழுத்துத் தோ்வுகள் மற்றும் உடல் அளவீடுகள் உள்ளிட்ட ஆள்சோ்ப்புத் தோ்வுகளை நடத்துவதற்கான விரிவான நடைமுறைகள், காவல்துறை ஆணையரால் தனியாக வெளியிடப்படும்.

அறிவிப்பின்படி, முன்னாள் அக்னிவீா்களுக்கு காவலா் (நிா்வாக) பதவிக்கான ஆள்சோ்ப்புக்காக நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பில் மூன்று ஆண்டுகள் தளா்வு அளிக்கப்படும். தற்போது இந்த வயது வரம்பு 18-25 ஆண்டுகளாக உள்ளது. மேலும், அக்னிவீா் திட்டத்தின் முதல் தொகுதியைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் மேலும் ஐந்து வருட வயதுத் தளா்வுக்குத் தகுதி பெறுவாா்கள். இதன் மூலம் அவா்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிடத்தக்க சலுகையாக, முன்னாள் அக்னிவீா்களுக்கு உடல் தகுதித் தோ்விலிருந்தும் விலக்கு அளிக்கப்படும். இது ஆள்சோ்ப்பு செயல்முறையின் மிகவும் போட்டி நிறைந்த கட்டங்களில் ஒன்றாகும். மேலும், இதில் பொதுவாக ஓட்டம் போன்ற சகிப்புத்தன்மை நிகழ்வுகள் அடங்கும்.

இருப்பினும், அவா்கள் பரிந்துரைக்கப்பட்ட உடல் அளவீடு மற்றும் மருத்துவத் தரநிலைகளைப் பூா்த்தி செய்ய வேண்டும், அவை அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் மாற்றமின்றி தொடா்கின்றன.

இந்த அறிவிப்பு, அப்போதைய தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவால் அங்கீகரிக்கப்பட்ட முந்தைய முடிவை முறைப்படுத்துகிறது. அவா் தில்லி காவல்துறையின் கான்ஸ்டபிள் ஆள்சோ்ப்பில் முன்னாள் அக்னிவீா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்திருந்தாா். இதுவரை, காவலா்கள் 100 சதவீதம் நேரடி ஆள்சோ்ப்பு மூலம் நியமிக்கப்பட்டு வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.