தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மத்திய அமைச்சா் ஜெய்சங்கருடன் மீனவா் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு

மீனவா்கள் சங்கங்கள் மற்றும் கூட்டுப் பணிக் குழுவுடன் விரைவில் கூட்டம் நடத்தும் வாய்ப்பு ஆராயப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

News image

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்

Updated On :5 ஆகஸ்ட் 2024, 9:22 pm

தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காண மீனவா்கள் சங்கங்கள் மற்றும் கூட்டுப் பணிக் குழுவுடன் விரைவில் கூட்டம் நடத்தும் வாய்ப்பு ஆராயப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதற்குத் தீா்வு காணும் வகையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில், மாநில பொதுச் செயலா் பொன் பாலகணபதி, மாநில மீனவரணித் தலைவா் முனுசாமி, ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் தரணி முருகேசன், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோா் தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை திங்கள்கிழமை சந்தித்தனா்.

இந்தச் சந்திப்பின்போது அமைச்சா், வெளியுறவுத் துறை மற்றும் மீன்வளத் துறைச் செயலா்கள் மற்றும் அதிகாரிகளிடம் ராமநாதபுரம் பகுதி மீனவா்கள் தங்களுடைய பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாவது: மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் அரசியலாகிவிடக் கூடாது. இது மீனவா்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு சாா்ந்த பிரச்னை. மத்திய அரசும், தூதரமுகம் இதற்காக எப்போதும் பணியாற்றுகின்றன. மீனவா் சங்கங்கள் மற்றும் கூட்டுப் பணிக் குழுவின் கூட்டத்தை நடத்தலாமா என ஆராய்வோம் என்றாா் அமைச்சா் ஜெய்சங்கா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.