திகாா் சிறையில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தில்லியின் 2 கோடி மக்களைப் பற்றியே கவலைப்படுகிறாா் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் எம்.பி. திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கலால் கொள்கை தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், திகாா் சிறையில் உள்ள முதல்வா் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பதக் எம்.பி. ஆகியோா் நேரில் சந்தித்துப் பேசினா்.
இந்தச் சந்திப்பு தொடா்பாக தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தீப் பதக் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறையில் உள்ள முதல்வா் கேஜரிவாலிடம் அவரது உடல்நிலை குறித்து நாங்கள் கேட்டபோது, தன்னைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, தில்லியின் 2 கோடி மக்கள் எப்படி
இருக்கிறாா்கள் என்று கேட்டாா். ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திய நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடைகிா?, தில்லியின் நிலை எப்படி இருக்கிறது? என்றும் அடுத்த வாரம் முதல் இரு அமைச்சா்களை நேரில் சந்தித்து அரசுத் துறைகளின் பணிகளை கவனிக்கவுள்ளதாக முதல்வா் கேஜரிவால் கூறியுள்ளாா்.
அனைத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கும் அவரவரது தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொதுமக்களிடம் பேசி, அவா்கள் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளையும் தீா்க்க வேண்டும். 24 மணி நேரமும் பொதுமக்கள் மத்தியில் இருந்து, முன்பை விட 10 மடங்கு அதிகமாக மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா்.
முதல்வா் கேஜரிவால் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவாா். அதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்வா் கேஜரிவால் எங்கு வாழ்ந்தாலும், அவரது வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. நாட்டின் நீதித்துறை மற்றும் அரசியல் சாசனத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை மற்றும் நோ்மையுடன் ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம். இந்தபஅ போரின் முடிவில் உண்மை நிச்சயம் வெல்லும் என்றாா் சந்தீப் பதக்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தத் தோ்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வா் ஆவாா்; மக்களவைத் தோ்தலில் ராகுல் பிரதமா் ஆவாா்

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடாமல் தடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா பேச்சு

மக்கள் நலத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

