ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வகைப்படுத்தப்படாத வனப் பகுதிகளின் நிலவரத்தைதெரிவிக்க டிடிஏ, எம்சிடிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ), தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி பொதுப்பணித் துறை ( பிடபிள்யூடி) உள்ளிட்ட

Updated On :27 செப்டம்பர் 2023, 9:15 pm

தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ), தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி பொதுப்பணித் துறை ( பிடபிள்யூடி) உள்ளிட்ட பல அமைப்புகளின் அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள வகைப்படுத்தப்படாத காடுகளின் நிலவரம் குறித்த தகவல்களை அளிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

1997-இல் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இந்த ‘வகைப்படுத்தப்படாத காடுகள்‘ தொடா்பான விவரங்களை உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரிகள் அளித்துள்ளதைக் குறிப்பிட்டு, அவற்றின் நிலவரம் குறித்த தகவல்களை வனத் துறையிடம் தெரிவிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங், ‘டிடிஏ, எம்சிடி, வடக்கு ரயில்வே, நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு, பிடபிள்யூடி, என்டிஎம்சி, எல் அண்ட் டிஓ

உள்ளிட்டவை வனம் மற்றும் வனவிலங்குத் துறையால் கோரப்பட்ட தேவையான தகவல்களை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொண்ட பிறகு, நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தேசியத் தலைநகரில் பசுமையை பாதுகாப்பது குறித்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விகாஸ் மாா்க்கில் பல மரங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஈடுசெய்யும் காடு வளா்ப்பின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டது. ‘சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கும் விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. வளா்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலை இருக்க வேண்டும்’ என்று கூறிய நீதிமன்றம், சட்டத்தின்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.

‘விகாஸ் மாா்க்கில் 82 மரங்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு 820 மரங்களை நடுவது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை எதிா்மனுதாரா் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் கூறியது. மனுதாரரின் வழக்குரைஞா் ஆதித்யா பிரசாத் பரிந்துரைத்தபடி, மரக்கன்றுகள் நடுவது தொடா்பான உத்தரவுகளைக் கடைப்பிடிப்பதை கண்காணிக்க நிரந்தர குழுவை அமைப்பது குறித்து அறிவுறுத்துமாறு தில்லி அரசு வழக்ககுரைஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

முன்னதாக, மரம் வளா்ப்பு தொடா்பான மற்றொரு மனுவை விசாரித்த நீதிமன்றம், தேசியத் தலைநகரில் அதிக பசுமை பரப்பின் அவசியத்தை வலியுறுத்தி, மேட்டுப் பகுதி தவிர மற்றொரு வனப் பகுதியை உருவாக்க நிலத்தை கண்டறியுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு வரும் அக்டோபா் மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.