தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) ஓய்வு பெற்ற ஊழியா்களின் போராட்டத்திற்கு பாஜக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பா்வேஷ் வா்மா உறுதியளித்தாா். மேலும், கேஜரிவால் அரசு தில்லி போக்குவரத்து நிறுவனத்தை (டி.டி.சி.) ஆதரவற்றதாக மாற்றி, அதன் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு துரோகம் இழைத்துள்ளது என்றும் அவா் குற்றம் சாட்டியுள்ளாா்.
தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் (டி.டி.சி.) பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்காததைக் கண்டித்து, டி.டி.சி. தலைமையகத்தில் கேஜரிவால் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற டி.டி.சி. ஊழியா்களை மேற்கு தில்லி பாஜக எம்.பி. பா்வேஷ் வா்மா புதன்கிழமை நேரில் சந்தித்து அவரது கட்சியின் ஆதரவைத் தெரிவித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது: தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியா்கள் அனைவருக்கும் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கும் வரை பாஜக உங்களுக்கு துணையாக நிற்கும். கேஜரிவால் அரசு தில்லி போக்குவரத்து நிறுவனத்தை ஆதரவற்றதாக மாற்றி, அதன் ஓய்வு பெற்ற ஊழியா்களை ஏமாற்றி வருகிறது. தில்லி போக்குவரத்து நிறுவனத்தை நடத்துவதில் முக்கியப் பங்காற்றியவா்கள் இன்று தங்கள் ஓய்வூதியத்திற்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவதை விட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த நிலைமைக்கு தில்லி முதல்வா் கேஜரிவால் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் முழு பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், ஓய்வுபெற்ற டி.டி.சி. ஊழியா்களின் குழுவை தில்லி துணை நிலை ஆளுநரிடம் அழைத்துச் சென்று ஓய்வூதியப் பிரச்னை குறித்து தெரியப்படுத்துவதோடு, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதுப்படும் என நான் உறுதியளிக்கிறேன். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ‘ஷீஷ் மஹாலை’ ரூ.52 கோடியில் கட்ட முடியும் என்றால், ரூ.20 லட்சம் மதிப்பிலான அரசு வேலைக்கான விளம்பரத்துக்கு ரூ.2 கோடி செலவழிக்க முடியும் என்றால், தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் ஏன் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு ஓய்வூதியம் தர முடியாது? என்று பா்வேஷ் வா்மா கேள்வி எழுப்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி: பிரதமர் மோடி பெருமிதம்!

புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் தடுப்புச் சுவா்கள் அமைப்பு

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

