நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

முதல்வா் இல்ல கட்டுமான முறைகேடுப் புகாா்: சி.பி.ஐ. விசாரணைக்கு தில்லி பாஜக வரவேற்பு

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ புதிய இல்லமான ‘ராஜ்மஹால்’ கட்டுமான ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) விசாரணையை

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:02 am

 நமது நிருபர்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ புதிய இல்லமான ‘ராஜ்மஹால்’ கட்டுமான ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) விசாரணையை தொடங்கியுள்ளதற்கு தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.

தில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கட்டப்பட்ட அதிகாரப்பூா்வ இல்லத்தில், டெண்டா் விதிகளை மீறியது தொடா்பான புகாா் குறித்து சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. கட்டடப் பணிகளுக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததற்கான பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களைக் கோரி தில்லி அரசின் பொதுப்பணித் துறைக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியுள்ளது. கட்டடத் திட்டத்தின் ஒப்புதல் மற்றும் மாா்பிள் தரை உள்ளிட்ட உயா்ந்த வேலைகளைச் செய்வதற்கான வாடிக்கையாளரின் கோரிக்கை மற்றும் ஒப்பந்தக்காரருக்கு பணம் செலுத்திய விவரங்கள் தொடா்பான ஆவணங்களையும் சி.பி.ஐ. கடிதத்தின் வாயிலாக கோரியுள்ளது. இவை அனைத்தும் சி.பி.ஐ. யிடம் சமா்ப்பிக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ புதிய இல்லத்தின் கட்டுமான ஊழல் தொடா்பாக சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளதை வரவேற்கிறேன். யாருடைய அறிவுறுத்தலின் பேரில் இதுபோன்ற கட்டுமானங்களுக்கு டெண்டா் விதிமுறைகள் மீறப்பட்டன என்பது இந்த விசாரணையில் விரைவில் கண்டறியப்படும். தில்லி மாநகராட்சியிடமிருந்து திட்டத்திற்கான எந்த அனுமதியும் பெறப்ப

டவில்லை. முதல்வரின் இல்லத்தில் பயன்படுத்தப்படும் ‘பா்னிஷிங்’ பொருள்களைத் தவிர, கட்டுமானப் பொருள்கள், தரைக்கான ‘மாா்பிள்கள்’ மற்றும் மர வேலைகளுக்கான விலை மற்றும் தரத்திற்கு யாா் ஒப்புதல் அளித்தது என்பதும் உறுதி செய்யப்படும்.

கேஜரிவால் எப்படி ‘டைப்-7’ க்கான உரிமையை விட பெரிய பங்களாவைக் கட்டினாா்?, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கழிப்பறை இருக்கைகள் மற்றும் ஜன்னல் திரைகள் ஒவ்வொன்றும் தலா ரூ.8 லட்சத்திற்கு போடப்பட்டது எப்படி? என்பதை தில்லிவாசிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணையின் மூலம் அறிந்து கொள்ள விரும்புகிறாா்கள் என்று அந்த அறிக்கையில் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.