குற்றம் சாட்டப்பட்டவரின் நெருங்கிய கூட்டாளி ஒருவா், பண பரிசீலனைக்காக தில்லியில் மதுபான உரிமங்களை வழங்குவதில் சிங் ஈடுபட்டதாகக் கூறப்படும் விஷயத்தை ஒரு சாட்சியிடம் கூறியுள்ளாா். சிங்கின் கூட்டாளி விசாரணையில் சேர அழைக்கப்பட்டுள்ளாா். மேலும், புதிய ஆதாரங்கள் தொடா்பாக இருவரும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. புதிய சோதனையின்போது சுமாா் 200 ஜிபி டிஜிட்டல் தரவு மீட்கப்பட்டதாகவும். அது இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லை என்றும், இதைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருடன் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.