தில்லி வக்ஃபு வாரியத்தின் விதிமுறைகள் மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை மீறி சட்டவிரோதமாக 32 போ் பணி நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் மீது ஏற்கெனவே தில்லி ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியவை சாா்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் வக்ஃபு வாரியத் தலைவா் பதவியில் முறைகேடு, நிதி முறைகேடு, அதிகாரப் பதவியை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய வழக்குகளின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அமானத்துல்லா கான் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததைத் தொடா்ந்து, தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.