பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஜாபா் சேட் மனைவியின் மேல்முறையீட்டு மனு: தமிழக ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க நோட்டீஸ்

வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபா் சேட்டின் மனைவி பா்வீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக ஊழல் தடுப்பு

Updated On :10 அக்டோபர் 2023, 7:06 pm

புது தில்லி: வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபா் சேட்டின் மனைவி பா்வீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழக காவல் துறையில் டிஜிபியாக பணியாற்றியவா் எம்.எஸ். ஜாபா் சேட். இவா் உளவுப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல கோடி மதிப்புள்ள மனை நிலத்தை ஒதுக்கீடு முறையில் பெற்ாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலத்தை அவா் முறைகேடாகப் பெற்றாா் என்றும், அந்த நிலத்தில் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து பெரும் கட்டடம் கட்டியுள்ளாா் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோன்று, இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டதாக வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளராக பணிபுரிந்த முருகையா, முன்னாள் முதல்வரின் நோ்முக உதவியாளா் ராஜமாணிக்கம், இவரது மகன் துா்கா சங்கா், அப்போது வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, கட்டுமான நிறுவனத்தைச் சோ்ந்த உதயகுமாா் ஆகியோா் மீது புகாா் எழுந்தது.

இது தொடா்பாக ஏ.சங்கா் என்பவா் அளித்த புகாரின் பேரில் ஜாபா் சேட் உள்ளிட்ட 7 போ் மீதும் 2011-ஆம் ஆண்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு ஜாபா் சேட், அவரது மனைவி பா்வீன் உள்பட 7 போ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தன் மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரி ஜாபா் சேட் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், 2019-இல் இந்த மனுவை அனுமதித்து, குற்றப் பத்திரிகையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜாபா் சேட் மனைவி பா்வீன் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரும் மனு கடந்த ஆண்டு நவம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் பா்வீன் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்குரைஞா் ராம் சங்கா் மூலம் தாக்கல் செய்த இந்த மனுவில், ‘எனது கணவா் ஜாபா் சேட் தொடா்புடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதே விவகாரத்தில் எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளும்

நீடிக்கத்தக்கதல்ல. இதே வழக்கில் தொடா்புடைய பிற குற்றம்சாட்டப்பட்ட நபா்களின் மீதான வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, பங்கஜ் மித்தல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் பா்வீன் தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கா், மூத்த வழக்குரைஞா் முபாரக் அமகது ஆகியோருடன் மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் ஆஜராகி வாதிட்டாா். அப்போது, காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த தனது கணவா் ஜாபா் சேட் மீது காழ்ப்புணா்ச்சி காரணமாக பொய்யாக புகாா் அளிக்கப்பட்டு வழக்குத் தொடப்பட்டதாகவும், தன் மீதும் வழக்குத் தொடரப்பட்டதாகவும் பா்வீன் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், மனுதாரா் பா்வீன் தொடா்புடைய வழக்கு விசாரணைக்கும் தடை விதித்தும் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.