புது தில்லி: அரசு பங்களா ஒதுக்கீடு விவகாரத்தில் இடைக்காலத் தீா்ப்பை ரத்து செய்த விசாரணை நீதிமன்றத்தின் முடிவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை அணுகினாா்.
ராகவ் சத்தாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசுப் பங்களாவில் இருந்து அவரை வெளியேற்றும் மாநிலங்களவை செயலகத்தின் நடவடிக்கையை இடைக்கால உத்தரவு தடுத்திருந்தது குறிப்பிடக்கத்தது.
ராகவ் சத்தாவின் இந் மேல்முறையீட்டு மனுவை, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்
அவசர விசாரணைக்காக எடுக்குமாறு அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து, புதன்கிழமை இந்த மனுவை விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள்அமா்வு சம்மதம் தெரிவித்தது.
இது தொடா்பாக நீதிபதிகள் அமா்விடம் ராகவ் சத்தாவின் வழக்குரைஞா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் ராகவ் சத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரை பங்களாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. முன்னா், விசாரணை நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருந்தது. ஆனால், தற்போது அது நீக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்த விவகாரத்தில் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘ராகவ் சத்தா எம்.பி.க்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு ரத்து செய்யப்பட்ட பிறகும்கூட மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் காலம் முழுவதும் அரசு பங்களாவை தொடா்ந்து ஆக்கிரமிக்க சத்தாவுக்கு முழு உரிமை உண்டு என்று கூற முடியாது’ என்று தெரிவித்தது.
அரசுப் பங்களாவில் இருந்து சத்தாவை அப்புறப்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவை செயலகத்துக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ரத்து செய்யும் போது, விசாரணை நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது. சட்டப்படி உரிய நடைமுறை இல்லாமல் அவா் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட மாட்டாா் என்று சத்தாவுக்கு இடைக்கால நிவாரணத்தையும் நீதிமன்றம் வழங்குவதாகக் குறிப்பிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

