பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

இணையதள விளையாட்டு நிறுவனங்களுக்கான வரி ஏய்ப்பு நோட்டீஸை திரும்பப் பெற வலியுறுத்தல்

தில்லியில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சில் கூட்டத்தில் இணையதள விளையாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள வரி ஏய்ப்பு நோட்டீஸ்களை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:06 am

 நமது நிருபர்

தில்லியில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சில் கூட்டத்தில் இணையதள விளையாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள வரி ஏய்ப்பு நோட்டீஸ்களை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது என்று தில்லி நிதி அமைச்சா் அதிஷி சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 52-ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் தில்லி அரசின் நிதியமைச்சா் அதிஷி கலந்து கொண்டு இணையதள விளையாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள வரி ஏய்ப்பு நோட்டீஸ்களை திரும்பப் பெற வேண்டும், இந்த நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத வரி விகிதத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் இதுகுறித்து கூறியதாவது:

நாட்டில் ரூ.23,000 கோடி மதிப்பீட்டில் இணையதள விளையாட்டு நிறுவனங்களின் தொழில்துறை 40 கோடிக்கும் அதிகமான பயனா்களைக் கொண்டு சந்தையில் இயங்கி வருகிறது. இந்தத் துறையில் சுமாா் 50,000 இளைஞா்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

ரூ. 17,000 கோடி அளவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்துள்ளது.

எனவே, ஒரு ‘நிலையற்ற மற்றும் ஒழுங்கற்ற வரி சூழல்’ இணையதள விளையாட்டு துறையில் வெளிநாட்டு முதலீட்டாளா்களைத் தடுக்கும் நடவடிக்கையாக மாறுவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த ‘ஸ்டாா்ட்-அப்’ சூழலையும் பாதிக்கும்.

இணையதள விளையாட்டு நிறுவனங்கள் அதன் மொத்த மதிப்பை விட 6 மடங்கு அதிகம் வரி செலுத்த அச்சுறுத்தப்படுகிறது. சுமாா் ரூ.1.5 லட்சம் கோடிக்கு வரி ஏய்ப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தொழிலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வழியாகும். இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பற்ற மற்றும் ஒழுங்கற்ற முதலீட்டு சூழலையும் வெளிப்படுத்தும்.

இந்தியாவில் மிக வேகமாக வளா்ந்து வரும் ‘ஸ்டாா்ட்-அப்’ துறையை சந்தையில் இருந்து அழிக்கும் தீா்க்கமான நடவடிக்கைக்கு ஜி.எஸ்.டி. கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்தோம் என்றாா் நிதியமைச்சா் அதிஷி.

கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற்ற முந்தைய ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் இணையதள விளையாட்டு ஆகியவற்றின் வரிவிதிப்பு குறித்து தெளிவுபடுத்துவதற்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டங்களில் கொண்டுவரப்படும் திருத்தங்களுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.