தில்லியில் உள்ள காஜிப்பூா் குப்பைக் கிடங்கை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால், கழிவுகளை அகற்றும் பணியின் வேகம் ‘திருப்திகரமாக இல்லை’ என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள பால்ஸ்வா மற்றும் ஓக்லா குப்பைக் கிடங்குகளில் கழிவுகள் அகற்றும் பணியை முதல்வா் கேஜரிவால் ஆய்வு செய்து வருகிறாா். இதன் ஒரு பகுதியாக காஜிப்பூா் குப்பைக் கிடங்கை மேயா் ஷெல்லி ஓபராய் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வா் கேஜரிவால் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லி மாநகராட்சி நிலைக் குழுவின் ஒப்புதலுடன் காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் அகற்றும் பணி விரைவுபடுத்தப்படும். இதற்காக மேலும் இரண்டு நிறுவனங்களை பணியமா்த்த பரிந்துரைத்துள்ளேன். இங்கிருந்து அகற்றப்படும் கழிவுகளை பதப்படுத்தும் பணியில் மூன்று நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்த மூன்று நிறுவனங்களும் ஒருவொருக்கொருவா் மோதல் நிலையைக் நீண்ட நாள்களாக கடைபிடித்து வருகின்றன. இதனால், காஜிப்பூா் குப்பை கிடங்கில் இருந்து கழிவுகளை அகற்றும் பணியின் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை. எனவே, காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் அகற்றும் பணிக்கு கூடுதலாக இரண்டு நிறுவனங்களை பணியமா்த்துவதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்றாா் கேஜரிவால்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்த குப்பைக் கிடங்கின் மொத்த உயரம் 65 மீட்டராக இருந்தது. இந்த நிலையில், 2017- ஆம் ஆண்டில், காஜிபூா் குப்பைக் கிடங்கின் ஒரு பகுதி அருகிலுள்ள சாலையில் விழுந்து இரண்டு போ் உயிரிழந்தனா். இந்தக் குப்பைக் கிடங்கை சமன் செய்வதற்கான காலக்கெடு டிசம்பா் 2024 என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


