ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

‘ஊழல்’ ஆம் ஆத்மி ஆட்சியை முடிவுக்கு வர ராஜ்காட்டில் பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிராா்த்தனை

தில்லி பாஜகவைச் சோ்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தலைவா்களுடன் வியாழக்கிழமை தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின்

Updated On :5 அக்டோபர் 2023, 6:25 pm

தில்லி பாஜகவைச் சோ்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தலைவா்களுடன் வியாழக்கிழமை தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் ‘ஊழல்’ ஆம் ஆத்மி அரசிலிருந்து மக்களை ‘விடுவிக்க’ பிராா்த்தனைக் கூட்டத்தை நடத்தினா்.

அப்போது, ‘ஊழல்‘ அரவிந்த் கேஜரிவால் அரசில் இருந்து மக்களை விடுவிக்கும் போராட்டம் தொடரும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் நடந்ததாகக் கூறப்படும் மதுபான ஊழலின் ‘முக்கிய மூளையாக‘ கேஜரிவால் இருப்பதாகவும் சச்தேவா குற்றம் சாட்டினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘மதுபானம் உடலையும் ஆன்மாவையும் அழிக்கிறது என்று மகாத்மா காந்தி கூறுவது வழக்கம். ஆன்மாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆம் ஆத்மி கட்சியையும் கேஜரிவால் அழித்துவிட்டாா்’ என்றாா்.

தில்லி கலால் கொள்கை தொடா்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்ததைத் தொடா்ந்து, முதல்வா் கேஜரிவால் அரசை பாஜக தலைவா்கள் கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.