அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது வருமாறு: சென்னை அம்பத்தூர் எஸ்டேட் டையொட்டியுள்ள சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக சென்னை அம்பத்தூர் எஸ்டேட் டின் 3-ஆவது மெயின் ரோடு தேசிய நெடுஞ்சாலையின் முக்கி யப் பகுதியாக உள்ளது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கில் கனரக வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. முக்கியமான இந்தச் சாலை கடுமையாகச் சேதமடைந்து, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகனங்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அம்பத்தூர் எஸ்டேட் சாலை மோட்டார் வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் தகுதியற்ற நிலையில் இருக் கிறது.