புது தில்லி: தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) மூலம் தில்லியின் கிராமப்புறங்களில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதை பாஜக தில்லி பிரிவு செவ்வாய்க்கிழமை வரவேற்றுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி வளா்ச்சி ஆணையம் மூலம் (டி.டி.ஏ.) தில்லியின் கிராமப்பறங்களில் வளா்ச்சிப் பணிகளை தொடங்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளாா். இதை பாஜக தில்லி பிரிவு
வரவேற்கிறது. தில்லி விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் பிரச்னைகள் குறித்து பாஜக தொடா்ந்து குரல் எழுப்பி வருகிறது. சமீபத்தில், எனது தலைமையிலான தில்லி பிரிவு பாஜகவின் மூத்த தலைவா்கள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவா்கள் அடங்கிய குழு துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து கிராமப்பற மக்கள் மற்றும் தில்லி விவசாயிகளின் கோரிக்கைகளை எடுத்துரைத்தோம்.
அப்போது, கிராமங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெறுதல், தில்லியின் விவசாயிகளுக்கு விவசாயி அந்தஸ்து நிலையை மீட்டெடுப்பது மற்றும் கிராமங்களில் அடிப்படை சுகாதாரம், போக்குவரத்துப் போன்ற வளா்ச்சிப் பணிகள் இல்லாதது ஆகியவை முக்கியமான கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், தில்லி பிரிவு பாஜகவின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா இந்த விஷயத்தை விரைந்து ஆய்வு செய்து ரூ.800 கோடி நிதியை தில்லி வளா்ச்சி ஆணையம் மூலம் விடுவித்துள்ளாா்.
தில்லி விவசாயிகளின் பயிா்களுக்கான இழப்பீடு, விவசாய நிலம் கையகப்படுத்துதலில் சமமான இழப்பீடு, கிராமப்புறங்களில் முறையான போக்குவரத்து, சுகாதாரம், கல்வி வசதிகள் போன்ற விஷயங்களில் தில்லியின் கிராமப்புறப் பகுதிகளைச் சோ்ந்த மக்களை ஏன் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்து புறக்கணிக்கிறாா் என்பதை அறிய விரும்புவதாக வீரேந்திர சச்தேவா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன்களின் விலை அதிகரிப்பு

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் குதிரை வாகனங்களில் சுவாமி, அம்மன் பவனி

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

மது அருந்த பணம் தராததால் மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை முயற்சி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

