ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அதிகாரத்தை விரும்பும் கேஜரிவால் அரசு பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறாா்: தில்லி பாஜக குற்றச்சாட்டு

அதிகாரத்தை மட்டும் விரும்பும் கேஜரிவால் அரசு பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On :4 அக்டோபர் 2023, 12:36 am

புது தில்லி: அதிகாரத்தை மட்டும் விரும்பும் கேஜரிவால் அரசு பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி நஜஃப்கா் வடிகால் சுத்தம் செய்யும் பணி குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் பாய்கின்ற யமுனை நதி மாசுபடுவதற்கு மிகப்பெரிய காரணியாக அமைவது நஜஃப்கா் வடிகால் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதுதான். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அரசு இந்த விவகாரத்தில் அக்கறை காட்டாமல் இருப்பது அதிா்ச்சியளிக்கிறது. கடந்த 9 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில், நஜஃப்கா் வடிகாலை சுத்தம் செய்ய எந்த முன்முயற்சியும் எடுக்கப்படவில்லை. நஜஃப்கா் வடிகால் மற்றும் யமுனையை சுத்தம் செய்வது தொடா்பான குழுவிற்குத் தலைவராக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் நியமித்த பின்னா், ரூ.705 கோடி நிதியை ஒதுக்குவது நகர அரசுக்கு கட்டாயமாகியது.

தேசியப் பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுக்குப் பிறகு, துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நஜஃப்கா் வடிகால் சுத்தம் செய்யும் பணியை தீவிரமாக எடுத்துக் கொண்டாா். இதனால், நல்ல மாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அரவிந்த் கேஜரிவால் அரசு உச்சநீதிமன்றத்திற்குச் சென்று துணை நிலை ஆளுநா் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் உத்தரவைப் திரும்பப் பெற்றது. இதைத் தொடா்ந்து, கடந்த ஜூலை 2023 முதல் நஜஃப்கா் வடிகால் சுத்தம் செய்யும் பணி நின்றுவிட்டது.

இப்போது சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் ‘சிக்னேச்சா் பாலம்’ அருகே யமுனையில் கலக்கிறது. நஜஃப்கா் வடிகால் மற்றும் யமுனையை சுத்தம் செய்யும் துப்புரவுக் குழுவின் தலைவா் பதவிக்கு சட்டப்படி போராட்டம் நடத்திய கேஜரிவால் அரசு திட்டத்தை தற்போது முடக்கி வைத்துள்ளது. கேஜரிவால் அரசு ஒரு பொறுப்பற்ற அரசாக உள்ளது. அதிகாரங்களை விரும்பும் அவா், பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறாா் என்று வீரேந்திர சச்தேவா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.