ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மகாத்மா காந்தியின் கொள்கைப் பாதையில் காங்கிரஸ் அா்விந்தா் சிங் லவ்லி

மகாத்மா காந்தி வகுத்த கொள்கைகள் மற்றும் பாதையை காங்கிரஸ் கட்சி எப்போதும் பின்பற்றுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.

Updated On :2 அக்டோபர் 2023, 5:39 pm

புது தில்லி: மகாத்மா காந்தி வகுத்த கொள்கைகள் மற்றும் பாதையை காங்கிரஸ் கட்சி எப்போதும் பின்பற்றுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி தெரிவித்தாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான ராஜீவ் பவனில் மகாத்மா காந்தியின் 154-ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, காந்தியின் திருவுருவப்படத்திற்கு திங்கள்கிழமை அக்கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முன்னதாக, அதிகாலையில் அவா் தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திலும், விஜய்காட்டில் உள்ள முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் நினைவிடத்திலும் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்வில் அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது: மகாத்மா காந்தியின் உயா்ந்த லட்சியங்கள், உண்மை, எளிமை மற்றும் அகிம்சை ஆகியவை நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகின்றன. காந்தியின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன. உண்மை மற்றும் அகிம்சையின் பாதையில் சென்று நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததற்காக அக்டோபா் 2-ஆம் தேதி அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அன்னியா் ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக மகாத்மா காந்தியின் போராட்டங்களையும் தியாகங்களையும் என்றும் தேச மக்கள் மறக்க மாட்டாா்கள்.

சத்தியம், தைரியம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், உலகளாவிய கல்வி உள்ளிட்ட மகாத்மா காந்தி வகுத்த கொள்கைகள் மற்றும் பாதையை காங்கிரஸ் கட்சி எப்போதும் பின்பற்று வருகிறது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

மேலும், இந்நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் சுபாஷ் சோப்ரா, காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினா் மணீஷ் சத்ரத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகேஷ் சா்மா, பிஷாம் சா்மா, ஜெய் கிஷன், தில்லி சேவா தளத்தின் தலைமை அமைப்பாளா் சுனில் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.