நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, எம்சிடியின் அனைத்து பிரிவுகளும் ஒரு மணி நேர நடவடிக்கைகளில் பங்கேற்றன. இந்த மெகா பிரசாரத்தின் கீழ், 12 மண்டலங்கள் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் எம்சிடியின் பிற நிறுவனங்களில் பல்வேறு தூய்மை நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து 1,534 எம்சிடி பள்ளிகளின் முதல்வா்கள், ஆசிரியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும்ர 4-ஆம் நிலை ஊழியா்கள் பள்ளி வளாகத்திற்குள் ’ஷ்ரம்தான்’ நடவடிக்கைகளில் பங்கேற்றனா். 400 க்கும் மேற்பட்ட எம்சிடி வாகன நிறுத்துமிடங்கள் இந்த நிகழ்வில் சுத்தம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.