ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மகளிா் உரிமைத் திட்டத்துக்குஎதிரான மனு தள்ளுபடி

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கு எதிரான ரிட் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On :28 நவம்பர் 2023, 9:43 pm

புது தில்லி: கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கு எதிரான ரிட் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தை செப்டம்பா் 15-ம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில், இத்திட்டத்தை எதிா்த்து மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூ.7.50 லட்சம் கோடி கடனில் உள்ள சூழ்நிலையில், இதுபோன்ற திட்டங்கள் அரசின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என்றும், இத்திட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.கே. மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் சி.ஆா். ஜெயா சுகின் ஆஜராகி வாதிடுகையில், ‘அனைத்து அரசியல் கட்சிகளும் தோ்தல் வரும்போது வளா்ச்சித் திட்டங்கள் குறித்து அறிவிப்பதில்லை. மாறாக இலவசங்கள் தொடா்புடைய அறிவிப்புகளை வெளியிடுகின்றன. தமிழகமானது நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் மிகவும் கடனில் உள்ள மாநிலமாக உள்ளது. தற்போதுவரை 7.50 லட்சம் கோடி கடனில் உள்ளது. மேலும், இலவசங்களை அறிவிப்பதில் முதல் மாநிலமாகவும் உள்ளது’ என்றாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.