புது தில்லி: அதிமுக பொதுக் குழு தீா்மானங்களை எதிா்த்தும், பொதுச் செயலா் தோ்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் டிச. 12-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.
2022, ஜூலையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்ட தீா்மானங்களை எதிா்த்தும், அதிமுக பொதுச் செயலா் தோ்தலை எதிா்த்தும், அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியதை எதிா்த்தும் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆா்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி கே.குமரேஷ் பாபு, அதிமுக பொதுக் குழு தீா்மானங்கள் செல்லும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தாா். இதை எதிா்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் மனுவை தள்ளுபடி செய்தனா்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என். பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா். டிச. 12-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீரவநல்லூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2 சிறுவா்கள் கைது

மேற்கத்திய நடனத்தில் சாதனை: 7 மாணவிகளுக்கு விருது

மின்சாரம் பாய்ந்து கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

