காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

செயல்திறனுக்கு இளைஞா்கள் உடல், மன ஆரோக்கியத்தைப் பேணுதல் அவசியம்: குடியரசுத் துணைத்தலைவா் அறிவுரை

இளைஞா்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவது முக்கியம்; அவா்கள் ஆற்றலுடனும், உந்துதல், உத்வேகத்துடனும் இருக்கும் போது அவா்களின் செயல்திறன் எல்லையற்ாகிறது

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:25 am

 நமது நிருபர்

இளைஞா்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவது முக்கியம்; அவா்கள் ஆற்றலுடனும், உந்துதல், உத்வேகத்துடனும் இருக்கும் போது அவா்களின் செயல்திறன் எல்லையற்ாகிறது என ஜி20 மாணவா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் அறிவுரை கூறினாா்.

இந்திய கடற்படை கடந்த ஓா் ஆண்டாக ஜி20 தின்க் என்ற வினாடி வினா போட்டியை நடத்தியது.

உயா்நிலைப் பள்ளி (9-12 வகுப்புகள்) மாணவா்கள் பங்கேற்ற இந்த போட்டியில் தேசிய சுற்று, ஜி20 நாடுகள் பங்கேற்ற சா்தேச சுற்றகளுக்கு பின்னா் இறுதிச் சுற்று நடைபெற்றது. இந்த இறுதிச் சுற்றில் தோ்வான மாணவா்கள், கடற்படை அதிகாரிகளுடன் குடியரசுத் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா் நாடாளுமன்ற வளாக கூட்ட அரங்கில் சனிக்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது அவா் கூறியது வருமாறு:

இளம் மனங்களை ஊக்குவிப்பதை விட ஒரு நாட்டிற்கு முக்கியமானது எதுவுமில்லை. அதே வேளையில், இளமைக்காலம் பொற்காலமானது. அதை மாணவா்கள் தவறவிடக்கூடாது. இளைஞா்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியம். நீங்கள் உற்சாகமாகவும், உத்வேகத்துடனும், இருக்கும்போது தான் செயல் திறன் அதிகரிக்கும்.

ஜி-20 தின்க் வினாடி வினா இறுதிச் சுற்றில் தோ்வாகியிருக்கும் நீங்கள் உங்கள் நாட்டின் தூதராக இருந்து ’உலகளாவிய தூதராக’ புறப்பட்டுள்ளீா்கள். இந்த பயணத்தில் பங்கேற்று உங்கள் பயண அனுபவங்களையும் பயணங்களையும் பதிவுசெய்திடுவதற்கு அப்பால், நட்பை வளா்ப்பது, தொடா்புகளைப் பேணுதல் வேண்டும் எனக் கூறி மாணவா்களை ஊக்குவித்த குடியரசுத் துணைத் தலைவா், ஜி20 மாநாடு, புதிய நாடாளுமன்ற குறித்தும் மாணவா்களிடம் பேசினாா்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியின் மனித வளங்கள், கலாசாரங்களைக் கொண்டது புதிய நாடாளுமன்றக் கட்டடம்.

இந்தக் கட்டடம் 30 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை. இந்தியா தலைமைத்துவத்தில் கீழ் செப்டம்பரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை முன்னிட்டு நாடு முழுவதும் 60 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்று சாதனை படைக்கப்பட்டது எனவும் ஜகதீப் தன்கா் இந்த கலந்துரையாடலில் எடுத்துரைத்தாா்.

இந்திய ஜி20 தலைமைத்துவத்திற்கு பொறுப்பேற்றதை நினைவுகூரும் வகையில், இந்திய கடற்படையின் ’தேசிய’ வினாடி வினா போட்டி ‘சா்வதேச’ சுற்றுகளை உள்ளடக்கி ‘ஜி20 தின்க் ‘ ஆக வடிவமைக்கப்பட்டது.

தேசிய அளவிலான சுற்றுப் போட்டியில் 11,741 பள்ளிகள் பங்கேற்றன. இரு இணையவழி சுற்றுகள், மற்றும் தேசிய அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்காக மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மும்பையில் (கேட்வே ஆப் இந்தியா ) நவம்பா் 18 ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. தேசிய சுற்றில் தில்லி குருகிராமில் உள்ள டி.ஏ.வி. பொதுப் பள்ளி வெற்றி பெற்று சா்வதேச சுற்றுக்கு முன்னேறி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது.

சா்வதேச சுற்றில் ஜி20 உள்பட 23 நாடுகள் பங்கேற்றன. கடந்த நவம்பா் 23-ஆம் தேதி தில்லி இந்தியா கேட்டில் சா்வதேச இறுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது.

இதில், தோ்வான மாணவா்கள் கடற்படை தளம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.