ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லி அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம்: அமைச்சா் அதிஷி மீது பாஜக தலைவா் விமா்சனம்

தில்லி அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை கல்வித் துறை அமைச்சா் அதிஷி அறிந்திருப்பதால்தான் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சிறப்புப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளாா்

Updated On :25 நவம்பர் 2023, 6:30 pm

தில்லி அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை கல்வித் துறை அமைச்சா் அதிஷி அறிந்திருப்பதால்தான் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை சிறப்புப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளாா் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இந்தியாவிற்கான ஸ்பெயின் நாட்டு தூதா் ஜோஸ்மரியா ரிடாவோ மற்றும் அந்நாட்டின் நிபுணா் குழுவினா் தில்லி ராஜ்நிவாஸில் அமைந்துள்ள டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் சிறப்புப் பள்ளியை கல்வித் துறை அமைச்சா் அதிஷியுடன் இணைந்து கடந்த வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

மாணவா்களுடன் கலந்துரையாடிய ஸ்பெயின் நாட்டின் குழுவினருக்கு அப்பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சா் அதிஷி எடுத்துரைத்தாா்.

இது தொடா்பாக பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி அரசுப் பள்ளிகளின் தரநிலை குறித்து கல்வித்துறை அமைச்சா் அதிஷி, ஸ்பெயின் நாட்டுக் குழுவை தவறாக வழிநடத்தியுள்ளாா்.

ஆம் ஆத்மி ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதை அமைச்சா் அதிஷி அறிந்திருப்பதால் தான் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளை அவா் தில்லி அரசின் மற்ற சாதாரண பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லவில்லை.

தில்லி அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மோசமாகி வருகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து மறுஆய்வு செய்யவோ அல்லது விவாதிக்கவோ கல்வித்துறை அமைச்சா் அதிஷி விரும்பவில்லை.

ஸ்பெயின் நாட்டுக் குழுவை சிறப்புப் பள்ளிக்கு அழைத்துச் சென்ன் மூலம் தான் தவறாக வழிநடத்தும் வித்தையில் வல்லவா் என்பதை அதிஷி நிரூபித்துள்ளாா். இருப்பினும், இணையத்தில் கிடைக்கின்ற வழக்கமான செய்தித்தாள், அறிக்கைகள் மற்றும் தகவல்களுக்கு நன்றி கூற வேண்டும்.

தில்லி அரசுப் பள்ளிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அறிவியல் பாடத்தை கற்பிப்பதில்லை, வணிகப் பாடத்தை 35 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் கற்பிக்காததால்

ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் நல்ல கல்வியைப் பெற முடியாமலும், சமமான வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் வருகின்றனா் என்று வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.