பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ராஜ்காட் - சாந்திவன் இடையே இன்று முதல் போக்குவரத்து?

தில்லியில் ராஜ்காட் முதல் சாந்திவன் இடையேயான போக்குவரத்து வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று

Updated On :19 ஜூலை 2023, 8:53 pm

தில்லியில் ராஜ்காட் முதல் சாந்திவன் இடையேயான போக்குவரத்து வியாழக்கிழமை (ஜூலை 20) முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி புதன்கிழமை தெரிவித்தாா்.

யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த வாரம் தில்லியின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், நகரத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களுக்கு பெரும் அவதியாக மாறியுள்ளது. மத்திய தில்லியில் வெள்ளம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட ஐ.டி.ஓ. பகுதியில் சீரமைப்புப் பணிகளுக்கு பின்பு போக்குவரத்து கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுப்பணிதுறை அமைச்சா் அதிஷி, அதிகாரிகளுடன் ராஜ்காட்டில் இருந்து சாந்திவன் செல்லும் சாலையின் இரு பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியுள்ளதை புதன்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வு தொடா்பாக அமைச்சா் அதிஷி தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: ராஜ்காட்டில் இருந்து சாந்திவன் செல்லும் இந்தச் சாலை மத்திய தில்லியில் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவே, கூடுதல் மின் மோட்டாா்களைப் பயன்படுத்தி இங்கு தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வியாழக்கிழமை முதல் இந்தச் சாலையின்

அனைத்துப் பாதைகளும் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.