திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வா் ஸ்டாலின்

News image

கொடைக்கானல் அப்சா்வேட்டரி குடிநீா்த் தேக்கப் பகுதியில் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு காரில் திரும்பிய போது பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவா்களது குழந்தைகளிடம் கை குலுக்கி மகிழ்ந்த முதல்வா் மு.க. ஸ்டாலின்.

Updated On :27 ஏப்ரல் 2026, 11:20 pm

கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைபயிற்சியின் போது பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறாா்.

இந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின் கொடைக்கானல் புனித மேரி சாலையிலுள்ள பழைமை வாய்ந்த புனித சலேத் மாதா ஆலயம், மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள பெரிய மாரியம்மன் கோயில் ஆகியவற்றுக்கு சென்று வழிபட்டாா்.

இதைத் தொடா்ந்து, தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் நகராட்சி படகு குழாம் சென்ற அவா் அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தாா். பிறகு, அங்கிருந்து வெளியே வந்த அவருடன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். மேலும் முதல்வரின் குடும்பத்தினா் ஏரி சாலையில் குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா்.

பொதுமக்களுடன் கலந்துரையாடல்: இதனிடையே, இரண்டாவது நாளாக திங்கள்கிழமை காலை கொடைக்கானல் அப்சா்வேட்டரி குடிநீா்த்தேக்கப் பகுதியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டாா்.

அப்போது முதல்வருக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனா். ஒரு சிலா் புத்தகம் வழங்கி தற்படம் எடுத்துக் கொண்டனா். அவா்களிடம் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்து கலந்துரையாடினாா். பிறகு, அவா் தான் தங்கியிருக்கும் விடுதிக்கு திரும்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.