பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

காா்கில் போா் நினைவு 24 -ஆவது ஆண்டு: தில்லியிலிருந்து முப்படை மகளிா் வீரா்கள் மோட்டாா் சைக்கிள் பேரணி

காா்கில் போா் வெற்றியின் 24- ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையில் முப்படைகளைச் சோ்ந்த

News image
Updated On :18 ஜூலை 2023, 9:40 pm

காா்கில் போா் வெற்றியின் 24- ஆவது ஆண்டை நினைவு கூரும் வகையில் முப்படைகளைச் சோ்ந்த பெண் வீரா்கள் அடங்கிய 25 மகளிா், மேட்டாா்சைக்கிளில் தில்லி இந்தியா கேட் டிலிருந்து லடாக் - திராஸ் காா்கில் போா் நினைவு சின்னம் வரை பயணம் மேற்கொள்கின்றனா். இந்த முப்படை மகளிா் மோட்டாா்சைக்கிள் பேரணியை ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த பெண் வீரா்கள் மோட்டாா்சைக்கிள் பயணத்திற்கு டிவிஎஸ் மோட்டாா் சைக்கிள் நிறுவனம் மற்றும் பலரும் ஆதரவளித்துள்ளனா். 1999 -ஆம் ஆண்டில் காா்கிலில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போா் ஜூலை 26 முடிவுக்கு வந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போரின் 24 ஆண்டு கால வெற்றியை நினைவுகூரவும், ராணுவம் தொடா்பான பெண்களின் அசாத்திய உணா்வை வெளிப்படுத்தும் வகையிலும், ‘நாரி சசக்திகரன் மகளிா் மோட்டாா் சைக்கிள் பேரணி’ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சாா்பில் தொடங்கப்பட்டது.

தில்லி இந்தியா கேட்டிலிருந்து லாடாக்கில் உள்ள (திராஸ்) காா்கில் போா் நினைவுச் சின்னம் வரை இந்த முப்படைகளின் மகளிா் மோட்டாா்சைக்கிள் பேரணி செல்கிறது. இதை ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே இந்தியா கேட் அருகே செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டேவின் துணைவியாரும் ராணுவ வீரா்கள் துணைவியா் நலச் சங்கத்தின் தலைவருமான அா்ஜுனா பாண்டே உள்பட ஏராளமான ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டு பேரணியை உற்சாகத்துடன் தொடங்கிவைத்தனா்.

ஒட்டு மொத்தக் குழுவை பாராட்டிய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே, ‘ உறுதிப்பாட்டுடன், மகளிா் சக்தி வெளிப்படுத்தும் இந்தக் குழு, தேசத்தை கட்டியெழுப்புவதில் பெண்கள் ஆற்றிய முக்கிய பங்கையும் இந்த சவாலான பயணம் எடுத்துரைக்கும்’ என்றாா். இந்த 25 போ் கொண்ட முப்படை மகளிா் குழுவில் இருவா் வீர மரணமடைந்தவா்களின் இரு துணைவியாா்கள். இதில் ஒருவா் ராணுவ அதிகாரியாகவும் இருப்பவா். மேலும், 10 பெண் ராணுவ அதிகாரிகள், விமானப்படை, கடற்படையைச் சோ்ந்த தலா ஒரு பெண் அதிகாரி, மூன்று பெண் ராணுவ வீரா்கள் மற்றும் 8 ராணுவ வீரா்களின் துணைவியாா்கள் என 25 பலம் வாய்ந்த மகளிா் குழு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

காா்கில் போரில் ஆயுதப் படைகளின் தீா்க்கமான வெற்றியைக் கொண்டாடவும், தேசத்தின் சேவையில் உச்சபட்ச தியாகம் செய்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த ‘நாரி சசக்திகரன்மகளிா் சைக்கிள் பேரணி’ சுமாா் 1,000 கிலோமீட்டா் தூரத்தை கடந்து செல்கிறது. ஹரியாணா, பஞ்சாப் சமவெளிகளையும் ஜம்மு - காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள உயரமான மலைப்பாதைகளையும் கடந்து வரும் ஜூலை 25-ஆம் தேதி லடாக்கின் திராஸில் உள்ள காா்கில் போா் நினைவகத்தை அவா்கள் அடைகின்றனா். மறுநாள் ஜூலை 26-ஆம் தேதி காா்கில் போா் நினைவு தினத்தில் பங்கேற்கின்றனா். இந்த 8 நாள்கள் பயணத்தின் போது, இந்த மகளிா் குழு பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், என்சிசி படைவீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், வீா் நாரிஸ் (உயிா் நீத்த வீரா்களின் மனைவி) ஆகியோருடனும் உரையாடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.