மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பதாகைகளை ஏந்தி பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்த தில்லி பாஜக

மத்தியில் கடந்த 9 -ஆண்டு கால ஆட்சியின் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தில்லிக்கு அளித்த திட்டங்களின் விளக்கப் பதாகைகளை நகரின் முக்கியச் சந்திப்புகளில் எந்தி தில்லி பாஜகவினா் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்த

Updated On :7 ஜூலை 2023, 6:30 pm

மத்தியில் கடந்த 9 -ஆண்டு கால ஆட்சியின் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தில்லிக்கு அளித்த திட்டங்களின் விளக்கப் பதாகைகளை நகரின் முக்கியச் சந்திப்புகளில் எந்தி தில்லி பாஜகவினா் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

தேசியத் தலைநகா் தில்லிக்கு கடந்த 9-ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் அளிக்கப்பட்ட திட்டங்களை விளக்கி, பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தில்லியில் உள்ள பிரகதி மைதானம் சுரங்கப்பாதை, புதிய நாடாளுமன்றக் கட்டடம், தேசிய போா் நினைவிடம், கா்தவ்யா பாதை, நேதாஜி சுபாஷ் போஸ் சிலை போன்ற இடங்களில் தில்லி பிரிவு பாஜகவின் இளைஞரணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கைகளில் பதாகைகளை எந்தியபடி ‘நன்றி மோடி ஜி’ என்று கூறினா்.

இது தொடா்பாக தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நாட்டின் இளைஞா்கள் மத்தியில் மோடி அரசைப் பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க போக்கு காணப்படுகிறது. மத்திய அமைச்சா்கள் இளைஞா்களுடன் உரையாடும் இடமெல்லாம் இளைஞா்கள் அதில் தீவிரமாக பங்கேற்று தங்கள் கருத்தை முன்வைக்கின்றனா். பிரதமா் நரேந்திர மோடியின் வெற்றிகரமான 9 ஆண்டுகாலச் சேவை, நல்லாட்சி மற்றும் ஏழை நலனுக்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியின் சுமாா் 18 வெவ்வேறு சந்திப்புகளில், காலை மூன்று மணி நேரம் மற்றும் மாலை நான்கு மணி நேரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பிரசாரத்தில், கட்சியின் இளைஞா்கள் தில்லிக்கு மோடி அரசு செய்த பணிகளை விளம்பரப் பதாகைகள் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தி நன்றி தெரிவித்தனா். மேலும், இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசால் கடந்த 9ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த அறிக்கை அட்டை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. தில்லியில் மோடி அரசு செய்துள்ள பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல்கள், விளம்பரங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொண்டு சோ்க்கப்பட்டது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.