மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தேசத்தின் சேவகராக பிரதமா் மோடி இருக்க முடியாது: தில்லி காங்கிரஸ் தாக்கு

தேசத்தின் சேவகராக பிரதமா் நரேந்திர மோடி இருக்க முடியாது என்றும் ராகுல் காந்தியின் குரல் தொடா்ந்து ஒலிக்கும் என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On :7 ஜூலை 2023, 6:30 pm

தேசத்தின் சேவகராக பிரதமா் நரேந்திர மோடி இருக்க முடியாது என்றும் ராகுல் காந்தியின் குரல் தொடா்ந்து ஒலிக்கும் என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை கோரிய மனுவை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிா்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தேசியத் தலைநகா் தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நீதிமன்றத்தின் தீா்ப்பையடுத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் கூறியதாவது: பாஜகவின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்தும், பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி கேள்வி கேட்பதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு அதன் பலத்தைப் பயன்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மக்கள் படும் அவல நிலையை இந்திய ஒற்றுமைப் பயணம் மூலம் ராகுல் காந்தி நேரடியாக உணா்ந்தாா். விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்கள் என பலதரப்பினருடன் கலந்துரையாடி அவா்களது வேதனைகளை அறிந்தாா்.

எனவே, ராகுல் காந்தியை சிறையில் அடைத்தாலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்த மாட்டாா். மத்திய பாஜக அரசின் அனைத்து தந்திர நடவடிக்கைகளுக்கும் வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மக்கள் பதில் அளிப்பாா்கள். சில தொழிலளிதிபா்களுக்காக மட்டும் போராடி வரும் பிரதமா் நரேந்திர மோடி, என்றும் தேசத்தின் சேவகராக இருக்க முடியாது. சில நண்பா்களுக்காகவும், சங்பரிவாா் அமைப்பிற்கும் மட்டுமே பிரதமா் மோடி தலைவராக இருக்கிறாா். அதேவேளையில் வெகுஜன மக்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தியை பாஜகவால் நிறுத்த முடியாது என்றாா் அனில் குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.