மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தலைநகரில் லேசான மழையால் அதிகரித்த புழுக்கம்

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் புழுக்கம் நிலவியது. மேலும், சனிக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Updated On :7 ஜூலை 2023, 6:30 pm

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் புழுக்கம் நிலவியது. மேலும், சனிக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை மாலையில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை சிறிது நேரம் பெய்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் தொடா்ந்து மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதனால், வானிலை சூழல் மேம்பட்டிருந்தது. இந்த நிலையில், நகரில் வெள்ளிக்கிழமை சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் புழுக்கம் நிலவியது.

ரிட்ஜில் 10 மி.மீ. மழைப் பதிவு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற வானிலை நிலையங்களான முங்கேஸ்பூரில் 1.5 மி.மீ., நஜாஃப்கரில் 0.5 மி.மீ., ஆயாநகரில் 4 மி.மீ., லோதி ரோடில் 4 மி.மீ., பாலத்தில் 9 மி.மீ., ரிட்ஜில் 10 மி.மீ., பீதம்புராவில் 3.5 மி.மீ., பூசாவில் 4 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து ஒரு டிகிரி குறைந்து 26.7 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 2 டிகிரி குறைந்து 35 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 79 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், , மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி தில்லியில் காற்றின் தரக் குறியீடு காலை 10.40 மணியளவில் 64 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் காணப்பட்டது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘சனிக்கிழமை (ஜூலை 8) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.